⚔⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧⚔
🛡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭🛡
https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_30.html
*TNPTF பொதுச்செயலாளரின்,*
*சுற்றறிக்கை எண்: 29*
*நாள்: 29.09.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*⚔*
*🛡நம் இயக்க வரலாற்றில் இணையற்ற அத்தியாயமாக 25.09.2019 முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் மாநிலம் முழுவதும் 6 முனைகளிலிருந்து தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்ற பள்ளிக்கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமைந்துவிட்டது. அதன் முத்தாய்ப்பாக நேற்று (29.09.2019) கரூரில் நடைபெற்ற பிரச்சாரப் பயண நிறைவுக் கூட்டம் அமைந்தது.*
*⚔*
*🛡மாநிலம் முழுவதுமிருந்து வருகை தந்திருந்த ஆசிரியப் பெருமக்களால், குறிப்பாக பெண்ணாசிரிய சகோதரிகளால் கரூர் மாநகரம் குலுங்கியது என்றே கூறலாம். கூட்டம் நடைபெற்ற 80 அடி சாலை நிரம்பி வழிந்தது.*
*⚔*
*🛡மேடையிலிருந்து பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆசிரியர்களின் கூட்டம் ஆர்ப்பரித்து நின்ற காட்சி நம் இயக்கத்தின் பெருவலிமைக்கும் சான்றாக அமைந்தது.*
*⚔*
*🛡குறுகிய கால அவகாசத்தில் இப்படியொரு கூட்டத்தை அணிதிரட்ட விடுமுறை நாட்களில் நம் இயக்கப் பொறுப்பாளர்கள் மேற்கொண்ட உழைப்பு ஈடு இணையற்றது. மாநிலம் முழுவதுமிருந்து கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பு புதிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தருவதாக அமைந்திருந்தது.*
*⚔*
*🛡ஐந்து நாட்கள் மாநிலம் முழுவதும் நாம் நடத்திய பிரச்சார இயக்கத்தின் மூலம் 400-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்களிடம் நம் கருத்துக்களைக் கொண்டு சேர்த்துள்ளோம்.*
*⚔*
*🛡தேசியக்கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - 2019 தொடர்பாக சாதாரண மக்களிடம், ஆசிரியர்களிடம், படித்தவர்களிடம், பாமரர்களிடம் கூட நம் பிரச்சார இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.*
*⚔*
*🛡இது போன்றதொரு பிரச்சார இயக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எந்த ஒரு அமைப்பும் நடத்தவில்லை. மற்ற அமைப்புகளுக்கு வழிகாட்டியாக நம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.*
*⚔*
*🛡கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வட்டார, நகரக் கிளைகளிலும் நம் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளோம். ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சனையில் நம் இயக்கம் நடத்திய இந்நிகழ்வு என்றென்றும் இயக்க வரலாற்றில் நிலைத்து நிற்கும்.*
*⚔*
*🛡பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றபோது ஆங்காங்கே நம் இயக்கத் தோழர்கள், குறிப்பாக ஆசிரிய சகோதரிகள் எல்லையிலிருந்து இயக்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்க இருசக்கர வாகனப் பேரணி நடத்தி பிரச்சாரக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்ற நிகழ்வு என்றென்றும் மறக்க இயலாதது. அது மட்டுமல்ல பிரச்சாரக் குழுவிற்கு ஆங்காங்கே உணவு, தங்குமிட ஏற்பாடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து உபசரித்ததும் நெகிழ வைத்த நிகழ்வுகளாகும்.*
*⚔*
*🛡தேசத்தின் எதிர்காலக் கல்வி நலனுக்கான ஒரு கள நிகழ்வை மிகவும் வெற்றிகரமாக்கிட அரும்பாடுபட்ட நம் பேரியக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பெருமைக்குரிய நிர்வாகிகளுக்கும், நம் இயக்கத்தின் நாடி நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தின் இணையற்ற உறுப்பினர்களுக்கும், பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் நமக்குப் பேராதரவு தந்த பொதுமக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் மாநில மையம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.*
*⚔*
*🛡அதே போன்று கரூர் நிறைவுப் பிரச்சாரக் கூட்டத்தை வெற்றிகரமாக்கிட கரூர் மாவட்ட இயக்கத் தோழர்களின் உழைப்பு மகத்தானது. மறக்கவே முடியாதது. இமைப்பொழுதும் சோராமல் எடுத்த முடிவை செயல்படுத்த கரூர் மாவட்டத் தோழர்கள் மேற்கொண்ட தன்னிகரற்ற உழைப்பு இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கரூர் மாவட்ட இயக்கத் தோழர்களுக்கு மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்கிறது.*
_'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை_
_ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்!_
_வெந்து தணிந்தது காடு"_
*⚔*
*🛡என்ற மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக, அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது தொடர்பாக TNPTF என்ற அக்கினிக் குஞ்சு பற்ற வைத்த நெருப்பு பற்றிப் பரவட்டும்.*
சென்னை.
29.09.2019
_🤝தோழமையுடன்_
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм