Monday, 30 November 2020

*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் அறிவிப்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு முடிவு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - (தேனி - 29.11.2020) - தீர்மானங்கள் - பொதுச்செயலாளர் செய்தியறிக்கை*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 20/2020 நாள்: 29.11.2020_*

*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் அறிவிப்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு முடிவு*

*⚔️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் தேனியில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார்.*

*⚔️*
*🛡️STFI அகில இந்தியப் பொதுக்குழு.உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ முன்னிலை வகித்தார்.*

*⚔️*
*🛡️தேனி மாவட்டச் செயலாளர் _தோழர்.செல்லத்துரை_ வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ வரவு - செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.*

*⚔️*
*🛡️கூட்டப் பொருள்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்க நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கவுரை ஆற்றினார்.*

*🛡️கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதாக அன்றைய முதல்வர் _ஜெ.ஜெயலலிதா_ அறிவித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*

*🛡️இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். 50 ஆண்டுகாலமாகதமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கானஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும்.*

*🛡️ஆசிரியர் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.*

*🛡️தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீடு  வழங்கிட வேண்டும்.*

*🛡️ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.*

*🛡️சித்திக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு ஆசிரியர், அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும்.*

*🛡️ _"கற்போம் எழுதுவோம்"_ திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைக்கைவிட வேண்டும்.*

*🛡️உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 கட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.*

*⚔️அதன்படி தமிழ்நாடு முழுவதும் 17.12.2020 அன்று வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திடவும்.,*

*⚔️09.01.2021 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்திடவும்,*

*⚔️மார்ச் 2021 ல் சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.*

*⚔️*
*🛡️துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள் தோழர். _ராஜாராம் பாண்டியன்,_ தோழர். _ராமர்,_ தோழர். _ஜெகநாதன்_ உட்பட பலர் பங்கேற்றனர்.*

_🤝தோழமையுடன்;_

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Saturday, 21 November 2020

*🛡️நீதியரசர் முருகேசன் குழுவும், 24 அரசாணைகளும்/ ஊதியக் குறைதீர் குழுக்களும் - இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️நீதியரசர் முருகேசன் குழுவும், 24 அரசாணைகளும்/ ஊதியக் குறைதீர் குழுக்களும் -  இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*

*_மாநில பொதுச் செயலாளரின் கடிதம், நாள்:21.11.2020_*

_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.

*⚔️*
*🛡️கடந்த 12.11.2020 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்கள்: 399 முதல் 422 முடிய உள்ள 24 அரசாணைகள் பற்றி பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் விவாதமும், விரக்தியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. 24 அரசாணைகளில் ஒன்று கூட ஆசிரியர்களுக்கானது இல்லை என்ற ஏமாற்றம் ஆசிரிய நண்பர்கள் பலரது பதிவுகளில் வெளிப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡️ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் அவர்கள் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது? அதன் அதிகார வரம்புகள் என்ன? என்பதை நம் பேரியக்கத் தோழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு அரசு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசாணை எண்:234 நிதி (ஊதியப் பிரிவு) துறை நாள்:1.6.2009 மூலம் நடைமுறைப்படுத்தியது. அந்த ஊதியக்குழுவில் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சங்கங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புக்கள், ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தன.அதில் முக்கியமானது தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது தொடர்பாக நம் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்கள் வைத்த கோரிக்கை.*

*⚔️*
*🛡️மேற்கண்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக அன்றைய தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு.ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது பரிந்துரைகளை மார்ச் 2010இல் 379 பக்கங்களில் அரசுக்கு சமர்ப்பித்தது. அக் குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு துறை ஊழியர்களின் ஊதியம் சார்ந்த 87 அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு அரசாணை கூட ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்குழு தனது பரிந்துரையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கினால் ஆண்டுக்கு 688 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும் என்றும், மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129 என்றும், இவ்வளவு எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கொடுக்க இயலாது எனவும் தெரிவித்தது.*

*⚔️*
*🛡️மேலும், தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்கள் என்றும், அங்கு விலைவாசி மிகவும் குறைவு என்றும், வாழ்க்கைச் செலவு குறைவு என்றும் வேடிக்கையான,  வினோதமான, நீதிக்குப் புறம்பான காரணங்களைக் கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து.*

*⚔️*
*🛡️இக்குழுவின் பரிந்துரைகளின்படி வெளியிடப்பட்ட அரசாணை களின் படி ஒரு சில துறைகளின் சிலவகைப் பணிநிலை ஊழியர்கள் பயன்பெற்றனர்.அதே நிலை கொண்ட வேறு சில துறை ஊழியர்களுக்கு பயன் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஒத்த ஊதிய விகிதம் பெற்று வந்த பல்வேறு துறைகளின் ஒரே பணி நிலைகொண்ட ஊழியர்களுக்குள் ஊதிய முரண்பாடு ஏற்பட்டது. இவ்வாறான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்டதுதான் முதன்மைச் செயலாளர் திரு.கிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையிலான மூவர் குழுவான ஊதியக் குறை தீர் குழு*

*⚔️*
*🛡️அக்குழு தனது அறிக்கையை 2012 அக்டோபரில் 336 பக்கங்களில் சமர்ப்பித்தது.அதன்படி தமிழக அரசு ஒரு நபர் ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட 21 துறைகளைச் சார்ந்த 57 வகையான அலுவலர்களின் ஊதியத்தைக் குறைத்து அல்லது மாற்றியமைத்து அரசாணை வெளியிட்டது.மூவர் குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி நமது இயக்கம் உட்பட பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தன.ஆனால், மூவர் குழு அதைப் பொருட்படுத்தவில்லை.*

*⚔️*
*🛡️ஆனால்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கை குறித்து தனது அறிக்கையில் மூவர் குழு குறிப்பிட்டுள்ள காரணம்தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்தது. அது தனது அறிக்கையில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என்றும், மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்றும், எனவே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது. இவ்வாறு அடுத்தடுத்த இரண்டு ஊதியக்குழுக்களும் பொய்யான, நீதிக்குப் புறம்பான காரணங்களைக் கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரப் பாதிப்பை நிகழ்த்தின.*

*⚔️*
*🛡️மூவர் குழுவால் பாதிக்கப்பட்ட 20 துறைகளின் ஊழியர் சங்கங்களும், பாதிக்கப்பட்ட சில தனி நபர்களும் இப்பிரச்சனையை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பும் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்காத நிலையில் உச்சநீதிமன்றத்தை  நாடினர். மேல்முறையீட்டு வழக்கு எண்.10029/2017 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 28.11. 2019 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 20 துறைகளின் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக ஒரு நபர் குழு மற்றும் மூவர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஆய்வு செய்து  தீர்வு கண்டிட ஊதிய குறை தீர்க்கும் குழு அமைத்திட ஆணையிட்டது. அதன்படி அமைக்கப்பட்டதுதான் நீதியரசர் முருகேசன் அவர்கள் தலைமையிலான இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான திரு.பணீந்திர ரெட்டி மற்றும் டாக்டர்.J. இராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு.*

*⚔️*
*🛡️அக்குழுவின் பரிந்துரைகள் 7.9.2020 அன்று தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.அதன் பேரில் வெளியிடப்பட்ட அரசாணைகள்தான் 20 துறைகள் சார்ந்த 52 வகை ஊழியர்களின் ஊதியம் சார்ந்த 24 அரசாணைகள்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கண்ட ஊதிய மாற்றம் என்பது நடந்துள்ளது. தமிழக அரசு தானாகவே முன்வந்து இந்த ஊதிய மாற்றத்தை வழங்கவில்லை.மேலும், 2010 இல் தொடங்கிய இப்பிரச்சனை 10 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வழியே தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் கூட சில பிரிவு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் தொடர்வதாகவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களால் கூறப்படுகிறது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் பெறாத நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவிடம் பல ஆசிரியர் அமைப்புகள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக பல கோரிக்கை மனுக்களை அளித்தன. அவ்வாறு கோரிக்கை மனுக்களை அளித்த ஆசிரியர் இயக்கங்களை எதற்காக நீதியரசர் தலைமையிலான குழு அழைத்து மணிக்கணக்கில் கருத்துக்களை கேட்டது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அவ்வாறு கேட்டறிந்த குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதன் மூலம் மூவர் குழுவான மூன்றாவது குழுவும் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டை நாமத்தை அளித்துள்ளது என்பதுதான் உண்மை. இதுவே பல ஆசிரிய நண்பர்களின் வருத்தத்திற்கும், வலைதளப் பதிவுகளுக்கும் காரணமாகி விட்டது.*

_மேலே குறிப்பிட்ட மூன்று குழுக்களும் தமிழக அரசின் ஆறாவது ஊதியக் குழு சார்ந்து அமைக்கப்பட்டவையாகும்._

*⚔️*
*🛡️ஆனால், தமிழக அரசு பிப்ரவரி 2018ல் அமைத்த திரு.சித்திக்,IAS தலைமையிலான குழுதான் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான குழுவாகும்.அக்குழு 2019 ஜனவரியில் தனது அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தும்,இதுவரை அந்த அறிக்கையைப் பற்றி தமிழக அரசு மூச்சுக் கூட விடவில்லை.தமிழக அரசு எதற்காக திரு. சித்திக் அவர்கள் தலைமையிலான குழுவை அமைத்தது? ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் திட்டமிட்டு ஏமாற்றுவதற்காகவா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.*

*⚔️*
*🛡️திரு.சித்திக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பாக நம் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்கள் ஆதாரப்பூர்வமாகக் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. அக்குழு அவற்றை ஏற்றுக்கொண்டு பரிந்துரைகளை அளித்துள்ளதா? அல்லது கடந்த ஆறாவது ஊதியக்குழுவின் 3 குறைதீர் குழுக்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதா? என்பதைக் கூட நம்மால் அறிய இயலவில்லை.*

*⚔️*
*🛡️இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கோரிக்கைக்காக தமிழ்நாட்டில் தொடக்கக்க் கல்வித்துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. சில சங்கங்கள் வெற்றுக்குரலையும், வேதனை கலந்த வார்த்தைகளையும் மட்டும் வெளிப்படுத்துகின்றன. இன்னும் சில சங்கங்கள் வெற்று அறிக்கைகளிலேயே வெற்றி பெற்றுவிட முடியும் என நம்புகின்றன. இன்னும் சில சங்கங்கள் கூட்டுப் போராட்டங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன. இன்னும் சில சங்கங்கள் தனிச்சங்கமாகக் கூட களத்தில் இறங்கிப் போராடியுள்ளன.*

*⚔️*
*🛡️ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்திற்காக, உச்சகட்டமாக தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் தனிச்சங்க நடவடிக்கையாக அரசாணை எரிப்புப் போராட்டத்தை நடத்திய ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமே.*

*⚔️*
*🛡️அப்போராட்டம் 29 மாவட்டங்களில் நடைபெற்றது. அதில் 12,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதில் 21 மாவட்டங்களில் 1539 ஆசிரியர்கள் மீது காவல்துறை குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அந்த 1539 ஆசிரியர்கள் மீதும் தொடக்கக் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. இன்றுவரை அந்த 1539  தியாகிகளும் பணி ஓய்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட வாழ்வாதாரப் பலன்களைப் பெற முடியாமல் உள்ளனர். இது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதை யாராலும் மறுக்க முடியாது.*

*⚔️*
*🛡️அதே போன்று 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளான மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஆதாரபூர்வமான நிகழ்வாகும். அவ்வாறு 17(ஆ)நடவடிக்கைக்கு உள்ளான நம் இயக்க உறுப்பினர்களின் மாவட்ட வாரியான பட்டியல் நம்மிடம் உள்ளது.*

*⚔️*
*🛡️இதுவரை தமிழக அரசின் ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழு சார்ந்து அமைக்கப்பட்ட அனைத்து ஊதியக் குறைதீர் குழுக்களும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சம் தீர்த்து விட்டன.இன்று சில ஆசிரியர் இயக்கத் தலைவர்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.*

_"அறிக்கைகள் மட்டுமே அடுத்தகட்ட  இலக்கைத் தீர்மானிக்க முடியாது._

_மலர் மாலைகளால் மட்டுமே மகுடம் சூடி விடமுடியாது._

_சால்வைகளால் மட்டுமே சரித்திரம் படைத்து விட முடியாது._

_பூங்கொத்துக்கள் மட்டுமே புரட்சி செய்துவிட முடியாது."_
*என்பதை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.*

*⚔️*
*🛡️மரத்தில் ஏறுபவனை எட்டும் வரை தான் தாங்க முடியும். இந்த அரசாங்கத்திடம் பேசிப்பேசியே, மனுக் கொடுத்து மனுக் கொடுத்தே உரிமைகளைப் பெற முடியும் என்பது எவ்விதத்திலும் நடக்காத செயல்.*

*⚔️*
*🛡️சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிவரும் வேளையில் நம் போராட்டக் களத்தை தீர்மானிக்க வேண்டிய காலமிது.*

*⚔️*
*🛡️இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக எத்தகைய கள நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தயார் நிலையில் உள்ளது.*

*⚔️*
*🛡️வேற்றுமை மறந்து, குறிக்கோள் உணர்ந்து சக இயக்கங்களும் இணைந்து வந்தால் போராட்டக்களத்தை நமதாக்குவது ஒன்றும் கடினமான செயல் அல்ல.*

*_போராட்டக்களத்தை வடிவமைப்போம்!_*
*_இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்போம்!_*
*_தொடர்ந்து சமரசமின்றி போராடுவோம்!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Wednesday, 18 November 2020

*_🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_ ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் (கிளை) - தமிழக அரசுக்கு கண்டனம்*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_ ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் (கிளை) -  தமிழக அரசுக்கு கண்டனம்*

*⚔️*
*🛡️இடைநிலை ஆசிரியர்களின்ஊதிய முரண்பாட்டை தீர்த்திட முனையாத தமிழக அரசுக்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் (கிளை) சார்பாக கண்டனம்.*

*கண்டிக்கின்றோம்!*
*கண்டிக்கின்றோம்!!*
*_தமிழக அரசை கண்டிக்கின்றோம்!!!_*

*⚔️*
*🛡️நீதியரசர் முருகேசன் அவர்களின் ஊதிய குறைதீர் குழு அறிக்கையின் அடிப்படையில் 24 துறைகளுக்கான ஊதிய திருத்த அரசாணைகள் வெளியிட்டுள்ள தமிழக அரசே! இடைநிலை ஆசிரியர்களின்ஊதிய முரண்பாட்டை தீர்த்திட முனையாதது*
*_ஏன்?_*
*_ஏன்?_*
*_ஏன்?_*

*⚔️*
*🛡️சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது போல், அரசும் ஆசிரியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பது*
*_ஏன்?_*
*_ஏன்?_*
*_ஏன்?_*

*கண்டிக்கின்றோம்!* *கண்டிக்கின்றோம்!!*
*_தமிழக அரசை கண்டிக்கின்றோம்!!!_*

_🤝இப்படிக்கு;_

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*
*ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் (கிளை).*

*🛡️TNPTF - நவம்பர் - 26 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️TNPTF - நவம்பர் - 26 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு - பொதுச்செயலாளர் அறிக்கை*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 19/2020  நாள்: 18.11.2020_

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._*

*⚔️*
*🛡️நவம்பர் 26 அன்று நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

*🛡️புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்,*

*🛡️மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்,*

*🛡️பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல்,*

*🛡️தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப்பெறுதல்,*

*🛡️விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல்,*

*🛡️பொது விநியோக முறையைச் சீர்படுத்துதல்,*

*🛡️அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை வழங்குதல்,*

*🛡️தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுதல்,*

*🛡️மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்துதல் மற்றும் அத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல்*

*⚔️*
*🛡️உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய அளவிலான மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ள நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.*

*⚡கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற பல உரிமைகளைப் பறித்து வருகிறது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.*

*⚡8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகக் கடுமையாகப் போராடி, இன்னுயிர் ஈந்து, ரத்தம் சிந்திப் பெற்ற உரிமை. அந்த உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.*

*⚡தமிழக அரசு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது.*

*⚡ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17(ஆ) நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திரும்பப் பெற மறுத்து வருகிறது.*

*⚡உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது.*

*🛡️எனவே, நவம்பர் 26 வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது.*

*⚔️*
*🛡️கொரோனா பொதுமுடக்கச் சூழலில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து தோழமைச் சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த நாளன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*                                      
                                        
சென்னை
18.11.2020

_🤝தோழமையுடன்;_
 
*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Tuesday, 17 November 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.11.2020) காலை 10 மணிக்கு தேனி, கம்மவார் கலைக் கல்லூரி எதிரில், திருமலை நகர் - அரண்மனைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🛡️மாநில பொதுக்குழு கூட்டமானது திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

_கூட்டப்பொருள்:_

*⚡வேலை அறிக்கை*

*⚡வரவு - செலவு*

*⚡கொரோனா பெருந்தொற்று - தமிழகத்தின் இன்றைய கல்விச்சூழல்.*

*⚡TNPTF, STFI, JFME போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் - ஆய்வு.*

*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டங்கள் - நிலுவையில் உள்ள 17(ஆ) மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் - ஆய்வு.*

*⚡இயக்கத்தின் அமைப்பு விதித் திருத்தக்குழு அறிக்கை - அமைப்பு விதிகளில் திருத்தம் - இறுதிப்படுத்துதல்.*

*⚡மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் வரவு-செலவு தணிக்கை முடித்தல் - நடைபெற்றுள்ள பணிகள் - இறுதிப்படுத்துதல்.*

*⚡இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் - மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைத் தேர்தல்கள் - கால அட்டவணை இறுதிப்படுத்துதல்.*

*⚡இயக்க இதழ்*

*⚡ஆசிரியர்களைப் பாதிக்கும் அரசாணைகள் - எதிர்கால நடவடிக்கைகள்.*

*🛡️அனைத்து மாநிலச் பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன். தமிழக அரசின் சுகாதார வழிக்காட்டுதல்களைப் பின்பற்றிக் கூட்டம் நடைபெறும்.*

_🤝தோழமையுடன்,_

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (28.11.2020) மாலை 4 மணிக்கு தேனி, கம்மவார் கலைக் கல்லூரி எதிரில், திருமலை நகர் - அரண்மனைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🛡️மாநில செயற்குழு கூட்டமானது திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

_கூட்டப்பொருள்:_

*⚡அஞ்சலி*

*⚡வேலை அறிக்கை*

*⚡வரவு - செலவு*

*⚡கொரோனா பெருந்தொற்று - தமிழகத்தின் இன்றைய கல்விச்சூழல்.*

*⚡TNPTF, STFI, JFME போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் - ஆய்வு.*

*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டங்கள் - நிலுவையில் உள்ள 17(ஆ) மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் - ஆய்வு.*

*⚡வேலூர் மாவட்டம் - சோளிங்கர் வட்டாரக்கிளை - ஸ்தாபனப் பிரச்சனை.*

*⚡இயக்கத்தின் அமைப்பு விதித் திருத்தக்குழு அறிக்கை - அமைப்பு விதிகளில் திருத்தம் - இறுதிப்படுத்துதல்.*

*⚡மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் வரவு-செலவு தணிக்கை முடித்தல் - நடைபெற்றுள்ள பணிகள் - இறுதிப்படுத்துதல்.*

*⚡இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் - மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைத் தேர்தல்கள் - கால அட்டவணை இறுதிப்படுத்துதல்.*

*⚡இயக்க இதழ்*

*⚡ஆசிரியர்களைப் பாதிக்கும் அரசாணைகள் - எதிர்கால நடவடிக்கைகள்.*

*⚡ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*⚡பொதுச்செயலாளர் கொணர்வன*

*🛡️அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன். தமிழக அரசின் சுகாதார வழிக்காட்டுதல்களைப் பின்பற்றிக் கூட்டம் நடைபெறும்.*

_குறிப்பு:_

*28.11.2020 பிற்பகல் 3 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்.*

சென்னை
15.11.2020

_🤝தோழமையுடன்,_

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Sunday, 8 November 2020

16.11.2020 அன்று 9,10,11 & 12 - ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு குறித்து TNPTF அயன் கருத்துகணிப்பு

Google Forms
https://docs.google.com/forms/d/1hvI6nTK9R2zu8rkpVJOup27TAEq2bt3VhHO2xeOY45s/edit?usp=drivesdk
Fill out in Google Forms
I've invited you to fill out a form:
16.11.2020 அன்று 9,10,11 & 12 - ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு குறித்து TNPTF அயன் கருத்துகணிப்பு
பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது மேலான கருத்துகளைப் பதிவிடுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

    Captionless Image
Create your own Google Form

Friday, 6 November 2020

*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! - இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! - இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 18/2020  நாள்: 06.11.2020_*

*⚔️*
*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._

*⚔️*
*🛡️தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கித் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை மிகவும் வரவேற்கத்தக்கது. அரசின் இம்முடிவு ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியது. ஆனால், அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இந்த இட ஒதுக்கீட்டில் கொண்டு வராதது இட ஒதுக்கீட்டின் பயன் ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைக் கணக்கில் கொண்டு இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது என்பது அவசியமானது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 438, நாள்:  29.10.2020 ல் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாநில இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதில் அரசு உதவிபெறும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாதது கடந்தகால நடைமுறைகளுக்கு முரணாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது.*

*⚔️*
*🛡️அரசு உதவி பெறும் பள்ளிகள் என்பவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் நோக்கில் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாடு விடுதலை அடைந்த பின்பும் நாடு முழுவதும் அரசே பள்ளிகளைத் தொடங்குவதற்கு இயலாத நிலையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக அரசுப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களால் அரசு உதவியுடன் தொடங்கப்பட்டவைதான் அரசு உதவி பெறும் பள்ளிகள். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கி வருகிறது. இங்கு முழுக்க முழுக்க அரசின் இலவசக் கல்வியே வழங்கப்பட்டுவருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளில் மிகப் பெரும்பாலோர் ஏழைக் குழந்தைகள். அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.*

*⚔️*
*🛡️தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 விலையில்லாப் பொருட்கள், அனைத்து கல்வி உதவித் தொகைகள் உட்பட அரசின் அனைத்துச் சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றன.*

*⚔️*
*🛡️இதுவரை தமிழக அரசு வெளியிட்டுள்ள மாணவர்களுக்கு பயனளிக்கும் எந்தவொரு திட்டம் தொடர்பான அரசாணையாக இருந்தாலும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றே குறிப்பிட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படாதது என்பது ஒரு பகுதி  ஏழைக் குழந்தைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு கடந்தகால நடைமுறைகளைப் பின்பற்றி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்த்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும். இது நலிவடைந்து வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கும் உதவும். அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும்.*

*⚔️*
*🛡️மேலும், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மாணவர் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதமாக உள்ளது. எனவே, தமிழக அரசு வழங்கியுள்ள 7.5 சதவீத மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானதாகும். எனவே, இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி பொன்.கலையரசன் குழு பரிந்துரைத்தவாறு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*                                        
                                        
சென்னை
06.11.2020

_🤝தோழமையுடன்;_
   
*_ச. மயில்,_*   _பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Wednesday, 4 November 2020

*🛡️கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் - ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*

*🛡️கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் - ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 17/2020  நாள்: 04.11.2020_

*_கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._*

*✍️*
*🛡️பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணை ந.க.எண்: 743/அ3/2020 நாள்: 28.10.2020 ல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 'கற்போம் எழுதுவோம்" என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*✍️*
*🛡️மேலும், அவ்வாணைவில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கையையும், எழுத்தறிவற்ற 20 நபர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் தேர்வு செய்து 04.11.2020 அன்று நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.*

*✍️*
*🛡️எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் இத்திட்டத்தை நிறைவேற்ற தேவையான களப்பணியாளர்களையும், கற்பித்தல் பணிக்கு தகுதியான ஆசிரியர்களையும் தனியாக நியமித்திட வேண்டும். அதை விடுத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவது என்பது அவர்களது அன்றாட நடைமுறைப் பணியான கற்பித்தல் பணியைப் பெரிதும் பாதிப்பதாக அமைந்துவிடும். இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொண்டு வருகிறது.*

*✍️*
*🛡️கடந்த காலங்களில் இதுபோன்ற வயது வந்தோர் கல்வித் திட்டங்களான முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், கற்கும் பாரதம் போன்ற திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட போது அதற்கெனத் தனியாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிலர் மட்டும் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இப்பணிக்கென நியமித்து ஊதியம் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் 60:40 நிதிப்பங்களிப்பை இதற்காகப் பயன்படுத்த வேண்டும்.*

*🛡️மேலும், இத்திட்டம் தொடர்பாக பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் செயல்முறை ஆணையில் இல்லாத பல விதிமுறைகளை பல்வேறு மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி அச்சுறுத்தி வருகின்றனர்.*

⚡'கற்போம் எழுதுவோம்" மையத்தை பள்ளிகளில் அமைத்திட வேண்டும்.

⚡பள்ளி வேலை நாட்களில் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்.

⚡தன்னார்வலர்களுக்கு ஊதியம் கிடையாது. தன்னார்வலர்கள் கிடைக்காவிட்டால் ஆசிரியர்களே பாடம் கற்பிக்க வேண்டும்.

⚡23.11.2020 அன்று வகுப்புக்கள் தொடங்கப்பட வேண்டும்.

⚡கற்போர் மையத்திற்கு வரவில்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கற்பிக்க வேண்டும்.

⚡கற்போருக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை வாட்சப் குழுக்கள் வழியே தெரிவித்து வருகின்றனர்.*

*✍️*
*🛡️தற்போது தமிழக அரசு 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 16.11.2020 முதல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில் முதியோர் கல்வி மையத்தை பள்ளிகளில் அமைப்பது என்பதும், பள்ளி வேலை நாட்களில் இரண்டு மணி நேரம் முதியோர் கல்வி மையம் இயங்கும் என்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களைக் கொண்டு மையம் அமைக்கப்படும் என வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது குறைந்தது 15 வயது முதல் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக எத்தனை வயது வரை மையத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.*

*✍️*
*🛡️மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களில் 95% க்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு உணவுக்கே வழி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகை தந்து இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்திய மற்றதாக உள்ளது. எனவே, தமிழக அரசு 'கற்போம் எழுதுவோம்" திட்டம் வெற்றி பெற இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்களைப் இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
                                                 _🗣️இப்படிக்கு,_
                                        
சென்னை     *_ச. மயில்,_*       _பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*