*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - இயக்குநர் அவர்களை சந்திப்பு! செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_10.html
🌟 10.11.2017 இன்று முற்பகல் 11 மணிக்கு பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர் துணைப் பொதுச் செயலாளார் மயில் மற்றும் மாநிலச் செயலளார் அ.ரஹீம் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
🌟 பிற்பகல் 2.45 மணி அளவில் தலைமைச் செயலகம் சென்று 3 பிப்ரவரி 2017ல் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட முற்றுகை போராட்ட பேச்சுவார்த்தையில் முன்னால் கல்வித்துறை செயலாளர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக ஆணை வழங்கக்கோரி முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், கல்வித் துறை முதன்மைச் செயலாளர், நிதித் துறைச் செயலாளர் மற்றும் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் அவர்களுக்கு கீழ்கண்டுள்ளவாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இணைச் செயலாளர் திரு.சரவணவேல் ராஜ் அவர்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌟 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பி.எட் தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த அரசு கடிதம் சார்பாக நமது எதிர்ப்பை தெரிவித்து உரிய ஆதாரங்கள் அனைத்தும் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
🌟 ஆசிரியர்கள் உயர்கல்வி பின்னேற்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்றை அமைச்சரை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment