Wednesday, 29 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f_29.html


🌟 *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், மாநிலப்பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை பின்வருமாறு*




🌟 *தமிழகத்தில் பணிநிரந்தரம் கோரியும் அரசாணை 191-ஐ அமல்படுத்தக் கோரியும் கடந்த 27.11.2017 திங்கள் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அரசு செவிலியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்*



🌟 *மருத்துவத் தேர்வுவாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டு  2 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் வெறும் 7700 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிநிரந்தரம் கோரியும், காலமுறை ஊதியம் வழங்கக் கோரியும் நடத்துகின்ற போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும்*



🌟 *கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் செவிலியர்களின் போராட்டத்தை தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இனியும் அலட்சியப்படுத்துவதை ஏற்கமுடியாது*



🌟 *எனவே, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டுச்சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்துப்பேசி  கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது*


🌟  *தோழமையுடன்-                                       தோழர். செ.பாலசந்தர்-      பொதுச்செயலாளர்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: