Monday, 27 November 2017

*ஆசிரியர் மாணவர் உறவை சீராக்கும் வகையில் பள்ளிகளில் ஆலோசனை மையம் அமைக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_46.html


🌟 தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5771 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், தொடக்கக்கல்வித் துறையின் 31,188 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில் தொடக்கக்கல்வித் துறையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 742 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 473   ஆசிரியர்களும் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 215 ஆசிரியர்கள்  பணியாற்றுகின்றனர்.



🌟 சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு சற்று தடுமாற்றத்துடன் செல்கிறது. மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். இதனால் ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் ஏற்பட்டு சில தாகாத நிகழ்வகள் நடந்து விடுகிறது. ஆசிரியர்களுக்கு  மாணவர்கள் மற்றும் அந்நியர்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு மருத்துவர்களை போல பணி பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரக்கோணம் அருகே ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லியதால் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறவை சீராக்கும் வகையில் பள்ளிகள் தோறும் ஆலோசனை மையம் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்தள்ளது.



🌟 இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது



🌟 தமிழ்நாட்டில் பொருளாதரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசு பள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள்ளே சென்று தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறியுள்ளன. மற்றும் சில இடங்களில் நெறி பிறழ் நடத்தையுள்ள மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வருவேற்கும் அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு நேரடி தொடர்பு உள்ளதால் பல தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டிற்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது.  மாணவர்கள் முன்னேற்றத்தில் தன்னலம் கருதாமல் பாடுபடும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு மதிக்கப்பட்ட நிலை இன்று மாறி வருகிறது. தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளை கூட நல்வழி படுத்த ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். ஒரு பக்கம் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார்படுத்த கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறு பக்கம் மாணவர்ளின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேருகிறது. ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து அதை சீராக்க கல்வித்துறை முன் வர வேண்டும். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் நடக்கும் வேண்டத்தகாத சச்சரவுகளால் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் நிலவி வருகிறது.



🌟 இதை போக்குவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது. வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல் வாய்ந்த வலிமையான சமுதாயமாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை ஆசிரியர்கள் தருவதற்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக தமிழக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணி பாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.



🌟 முகநூல் தகவல் பகிர்வு:

தோழர். முத்துப்பாண்டி,
மாவட்ட செயலாளர்,
சிவகங்கை மாவட்டம்.

நன்றி தோழர்!



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: