*சமூகத்தை செதுக்கும் உளியான ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுங்கள்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f_26.html
🌟 வகுப்பறைச்சூழலையும், கற்பிக்கும் முறையையும் நிர்மானிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்குங்கள்.
🌟 நீங்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டும், இதைத்தான் கற்பிக்க வேண்டும், 100% அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடத்தில் நிறைவாக இருக்க வேண்டும் இத்தனை நாட்களுக்குள் என ஆசிரியர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்காதீர்கள்.
🌟 அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கற்றல், கற்பித்தல், அதன் விளைவுகளை வடிவமைப்பது தவறு. வகுப்பறைச் சூழலில் அமர்ந்து கொண்டு, மாணவர்களின் மனங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் பொழுதுதான் அவரவர்க்கான கற்பித்தலை எவ்வாறு அமைப்பது என்பதை உணர முடியும். அது அந்தந்த வகுப்பு ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
🌟 தன் பிள்ளைக்கு எந்த நேரத்தில் என்னென்ன கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்பதை அப்பிள்ளையின் தாய் (மட்டுமே) நன்கறிவார். அதன்படி செயல்படவும் செய்வார். அந்தக் குழந்தைக்கு என்னென்ன தந்தாய் என ஒவ்வொரு நிமிட வாரியாகப் பட்டியலிட்டு பதிவு தயாரிக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஒரு வித மன உளைச்சலை உண்டாக்கி ஒவ்வொரு நிமிடமும் அந்தப் பதிவைத் தயாரிக்கவே அவளுக்கு நேரம் சரியாகப் போகும். குழந்தைக்குத் தேவையானவற்றை குறித்த நேரம் வழங்கவியலாது. இவ்விசயத்தில் அந்தத் தாய்க்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். அதுபோலவே ஆசிரியர்களுக்கும்.
🌟 ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழல், மனச்சூழல் என்ன என்பதை அறிந்து செயல்பட ஆசிரியர்களுக்கு அவகாசம் கொடுங்கள். இதில் பெற்றோருக்கும் பெரும்பங்கு உண்டு.
🌟 எனவே கற்பித்தல் பணியைப் பொறுத்தவரை ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குங்கள்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment