*கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_16.html
🌟 அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
🌟 மாணவ - மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும். இதற்கான
🌟 சர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
🌟 இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
🌟 கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
🌟 ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.
🌟 அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.
🌟 பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
🌟 மேலும் தகவல் களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment