🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_56.html
🌟 தொடக்கக்கல்வி துறையின் கீழுள்ள அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தம் கல்வித் தகுதியை தொடக்கக்கல்வியில் 1 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) பட்டம் பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
🌟 01.01.2007 க்கு முன் இடைநிலை/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் இளங்களைப் பட்டம் படித்திருந்தாலும் பட்டதாரி/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம்.
🌟 பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அரசாணைப்படி 01.01.2007 க்கு பிறகு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தவிர்த்து இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மேற்படி பதவி உயர்வு நீடிக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால்,
🌟 தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் 1 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) பட்டம் பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
🌟 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை பட்டப்படிப்பில் பயின்று உயர் கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற இயலும்.
🌟 வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியாக கொண்டு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ஊக்க ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்க இயலாது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment