Friday, 8 December 2017

*JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/jactto-geo.html


*JACTTO-GEO போராட்ட அறிவிப்பு*


*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே*


*வணக்கம்*


🌟 ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. 


🌟 இக்கூட்டதிற்கு  ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பார்கள் மோசஸ, சுப்ரமணியன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்கள். 


🌟 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


⚡ 1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்.


⚡ 2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய அனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 2 1 - 12-17 அன்று முறையீடு செய்வது.


⚡ 3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்ற தலைப்பில்  கருத்தரங்கம் திருச்சியில் 31.12 .17. அன்று  ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.


⚡ 4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான, 

1. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல்  பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தல், 

2)  21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,

3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 

4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், 5)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல், 

6) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்துதல், 

7) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தல்,  

8) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை 

⚡ டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லை என்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


🌟 *இன்றைய கூட்டத்தில் *ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினுள்,*



⚡ *1. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம்*


⚡ *2. தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்*


⚡ 3. *தமிழக பகுதிநேரத் தொழிலாசிரியர் முன்னேற்ற சங்கம்*

*உள்ளிட்ட 3 இயக்கங்கள் புதிதாக இணைந்துள்ளன.*



🌟 கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் . மாயவன்,மீனாட்சி சுந்தரம்,முத்துசாமி,அன்பரசு,வெங்கடேசன்,தாமோதரன்,தாஸ், செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



🌟 *நீதிமன்றத் தலையீடுகள் உள்ள காலகட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின்* *மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளில் நமது இயக்கத் தோழர்களும் தீரத்துடன் கலந்து கொள்வதற்கான கள* *நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


🗣️ தோழமையுடன்;

*தோழர்.பாலசந்தர்*மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



 *🎤 ஜேக்டோ ஜியோ உயர் மட்டக்கூட்டத்தி ல் TNPTF பொதுச்செயலாளர்.* *தோழர்.பாலசந்தர்* *இடைநிலை ஆசிரியர்* *ஊதியக்குறைபாடு* *குறித்து பேசிய* *நிகழ்வு....*


 https://youtu.be/Lu6zRey9YWk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: