Thursday, 14 December 2017

*தமிழ்நாடு அரசு தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் அவர்களை (TNPTF) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சந்திப்பு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f.html



*🌟 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், துணைப் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில், திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர்.ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் நமது துறைத்தலைவர் என்ற அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அவர்களை இன்று (14.12.17) நேரில் சந்தித்தோம்.


இச்சந்திப்பில்,*


🌟 இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டைச் சரி செய்யாது நடைமுறைப்படுத்தியுள்ள புதிய ஊதியக்குழு தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு அரசின் தனிக்கவனத்திற்கு இட்டுச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டது.


🌟 ஊதிய உயர்வுக் கணக்கீடுகளுக்கு எடுத்துக் கொள்ளாது CPS பிடித்தத்திற்கு மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.2000/- தொடர்பான ஊதியக்குழு முரண் குறித்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.


🌟 ரூ.500, ரூ.60 & ரூ.30 சிறப்பு ஊதியங்கள் குறித்தும் இயக்குநர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

🌟 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் / தமிழாசிரியர்களின் B.Lit., B.Ed., ஊக்க ஊதியம் குறித்த தெளிவுரையும் கோரப்பட்டுள்ளது.


🌟 ஒன்றிய மாறுதலின் போது ஏற்படுவது உள்ளிட்ட இளையோர் மூத்தோர் ஊதிய முரண் குறித்தும் விளக்கப்பட்டது.


🌟 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படியான வேலைநாட்களை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொறுத்தி கல்வியாண்டு - நாட்காட்டி ஆண்டு பயன்பாடு குறித்த குழப்பங்களுக்கான தெளிவுரை வழங்கவும் கோரப்பட்டுள்ளது.


🌟 அண்மைக்காலமாக நடைபெற்று வரும் குழு ஆய்வால் (Team Visit) ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பங்கள் & மனமடிவுகள் குறித்தும் இயக்குநர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


🌟 இவை உட்பட இன்று இயக்குநர் அவர்களுடனான சந்திப்பில் கூறப்பட்ட ஆசிரியர் பிரச்சினைகளைத் தீர்க்கப் பரிசீலிப்பதாக இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.


🤝 _தோழமையுடன்_

*செ.பாலசந்தர்,*_பொதுச் செயலாளர்,_*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*





🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: