*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் முக்கியத் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_14.html
🌟 TNPTF - பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
🌟 *தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில/மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு முறை*
🌟 *நமது அமைப்பு விதிகளின்படி*
🌟 *(1)மாநிலப் பொதுக்குழு*
⚡ *(1)1000 உறுப்பினர்களோ அதற்கு மேலோ உள்ள மாவட்டங்களுக்கு முதல் 1000 க்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 5 பேரும் அடுத்த 500 க்கு (அதாவது 256 க்கு மேல்) ஒருவர் என்ற அடிப்படையில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்*
⚡ *(2)1000 க்கு குறைவான மாவட்டங்களுக்கு தலைவர்,செயலாளர், பொருளாளர் ஆகிய 3 நபர்கள் மட்டுமே மாநிலப் பொதுக்குழுவில் வர முடியும். (அமைப்பு விதி (பக்கம் -13 -பகுதி 11 ல் 2(2).மாநிலத் தேர்தலில் இவ்விதிகளின் படி மட்டுமே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்*
🌟 *(2).மாவட்டப் பொதுக்குழு*
⚡ *(1)50 உறுப்பினர்களைக் கொண்ட வட்டாரக்கிளையில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் மட்டுமே மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்*
⚡ *(2)50 க்கு மேல் உறுப்பினர்களை கொண்ட வட்டாரக்கிளையின் அடுத்த ஓவ்வொரு 50 உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யலாம் (அதாவது 26 க்கு மேல்). (அமைப்பு விதி, பக்கம் -23 -பகுதி 11 ல் 6(2,3).மாவட்டத் தேர்தலில் இவ்விதிகளின் படி மட்டுமே வாக்காளர் பட்டியல் ஏற்பளிக்கப்படும்*
🌟 *தோழமையுடன்: (தகவலுக்காக)*
செ.பாலசந்தர்,
பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment