*தமிழ்நாடு பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_24.html
🌟 சிவகங்கையில் உதயமாக இருக்கிறது தமிழ்நாடு பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு
(Tamil Nadu Forum For Women Teachers')
வருகிற 26.1.2018 அன்று இந்திய குடியரசு தினத்தில் தமிழ்நாடு பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு சிவகங்கையில் தன் கிளையை விரிவுபடுத்த இருக்கிறது.
🌟 தொடக்கக்கல்வி முதல் கல்லூரி வரை பணியாற்றும் பெண் ஆசிரியர்களை மட்டும் உறுப்பினராக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு அகில இந்திய அளவில் 18 மாநிலங்களில் 10 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்டு பரந்து விரிந்துள்ளது.
🌟 எந்த இயக்கத்தில் அங்கம் வகித்தாலும் இதில் உறுப்பினராகலாம்.
🌟 ஒரே நிபந்தனை பெண் ஆசிரியராக இருக்க வேண்டும்.
🌟 பெண்களின் தனிப்பட்ட உரிமைக்காக இந்த அமைப்பு குரல் கொடுக்கும். சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 26.1.2018 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட உள்ளது.
🌟 இதற்காக இந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் பங்கேற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களை ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.
🌟 100 சதவீத பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ள இந்த அமைப்பில் நமது இயக்க பெண் ஆசிரியர்களையும் பங்கேற்க வைக்குமாறு அனைத்து பொறுப்பாளர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
🌟 ஆசிரியர் பணியில் 80 சதவீத பெண் ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களது தனிப்பட்ட பிரச்சணைகளுக்கு இந்த அமைப்பு ஒரு வரப்பிரசாதமாகும்.
🌟 இந்த வாய்ப்பை அனைத்து பெண் ஆசிரியர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
🌟 மாவட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னால் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்படும்.
*பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!!!*
*பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!!!*
*⚡தோழமையுடன்:*
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்.
*⚡தகவல் பகிர்வு:*
*தோழர்.முத்துபாண்டி,*
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment