🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_41.html
*🌟 தொடக்கக் கல்வித்துறையில் இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடத்துதல், ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் காலிபணியிட விபரங்கள் அணைத்தும் இணையதளம் வாயிலாக பதிவு செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.*
🌟 தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள் விபரங்கள் மற்றும் பள்ளிகளில் தற்போது உள்ள காலி பணியிட விபரங்கள் ஆகியவற்றை www.tndse.com என்ற இணையதளத்தில் User Name, Password பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும் பதிவு செய்ய வேண்டும்.
⚡ *User Name: தங்கள் பள்ளியின் UDISE CODE*
⚡ *Password: 123456 (login செய்தபிறகு password மாற்றிக்கொள்ளலாம்).*
🌟 மேற்படி விபரங்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பதிவு செய்வதை அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🌟 அனைத்து விபரங்களையும் சரியாகவும், துல்லியமாகவும் 09.01.2018 க்குள் இணையத்தில் பதிவு செய்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment