🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_33.html
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் இன்று (08.01.2018) இயக்குநர்களை சந்தித்து 09.02.2018 ல் 15 அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி மனு அளித்து, அடுத்த கட்ட போராட்டம் செய்யும் சூழலும் விளக்கமும் தரப்பட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துதல் சார்பான முன் அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.*
🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் தோழர்.மோசஸ், பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர், மாநில துணை பொதுச்செயலாளர் தோழர்.மயில், மாநில செயலாளர் தோழர்.ரஹும் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இன்று (08.01.2018) DPI வளாகத்தில்,
⚡தொடக்கக்கல்வி இயக்குநர் மாண்புமிகு.கருப்பசாமி அவர்களையும்,
⚡பள்ளிக்கல்வி இயக்குநர் மாண்புமிகு. இளங்கோ அவர்களையும்,
⚡இணை இயக்குநர் மாண்புமிகு.ஶ்ரீதேவி அவர்களையும்,
⚡மத்திய கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி திட்ட நிறுவன (RMSA) இயக்குநர் மாண்புமிகு. இராமேஸ்வரமுருகன் அவர்களையும்,
🌟 சந்தித்து ஆசிரியர்களின் நியாயமான 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும்,
🌟 கோரிக்கைகளின் நியாத்தை உணர்ந்து கோரிக்கை தொடர்பான ஆணைகளை வெளியிடுமாறும்,
🌟 இது குறித்து ஏற்கனவே மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை, நிதித்துறை, நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச்செயலாளர்கள் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு முறையாக மணு அளித்தும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் பின்
🌟 15 அம்ச கோரிக்கையினை நிறைவேற்ற வலியுறுத்தி,
⚡04.11.2016 அன்று வட்டார அளவில் ஆர்பாட்டமும்,
⚡20.11.2016 அன்று மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதப் போரட்டமும்,
⚡03.02.2017 அன்று 12000 பேர் பங்கேற்ற இயக்குநரக முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.
⚡03.02.2017 முற்றுகை போராட்டத்தின் போது பள்ளிக்கல்வித் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தையில் கோரிக்கை தொடர்பான ஆணைகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும்,
⚡பேச்சுவார்த்தையின் படி ஆணைகள் வெளியிட பள்ளிக்கல்வித்துறை மெத்தன போக்கை கடைபிடித்ததால் 10.05.2017 அன்று மாநில நிர்வாகிகள் இயக்குநர் அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைநகரிலும் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
⚡10.05.2017 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் மாநில நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் விரைவில் ஆணைகள் வெளியிட இருப்பதால் போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
🌟 இத்துணை போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தியும் அரசு மெத்தன போக்கினையையே காண்பித்து வருகிறது என்றும்
🌟 இயக்குநர்களிடம் தெளிவாக சொல்லப்பட்டது,
🌟மேலும் அரசு மெத்தன போக்கினை களைந்து நியாயமான கோரிக்கைகள் மீது உடனடியாக பரீசிலனை செய்து உரிய ஆணை வெளியிட வழிவகை செய்ய வலியுறுத்தப்பபட்டுள்ளது,
🌟ஆணைகள் வெளியிட வழிவகை செய்யாத பட்சத்தில் 09.02.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகளான 6 பெண்கள் உட்பட 19 நிர்வாகிகள் DPI வளாகத்தில் உள்ள இயக்குநர் அலுவலக வாயிலிலும், 32 மாவட்ட தலைநகரில் அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக வாயிலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.
*🌟 15 அம்ச கோரிக்கைகள் 🌟*
⚡தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிடுக.
⚡புதிய தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துக.
⚡B.Lit தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் தனது கல்வித் தகுதியை உயர்த்தி B.Ed பயின்று அதற்கான ஊக்க ஊதியம் பெற்று வந்ததை இயக்குநர் அவர்கள் தனது செயல்முறைகள் மூலம் நிறுத்தம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
⚡B.com மற்றும் BA.Economics ஆகிய பட்டப்படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் பெற்று வந்ததை இயக்குநர் அவர்கள் தனது செயல்முறைகள் மூலம் நிறுத்தம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
⚡உயர் கல்வி பயின்றதற்கு அனுமதி (பின்னேற்பு) வழங்க வேண்டும்.
⚡மூத்தோர்-இளையோர் ஊதிய முரண்பாடு களைய அரசாணை.
⚡பொது மாறுதலுக்குப் பின் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
⚡தனி ஊதியம் ரூ.2000 க்கு அதற்குரிய முழு பணப்பலன்களையும் வழங்கிட வேண்டும்.
⚡இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த சிறப்பு படிகளை எட்டாவது ஊதியக்குழுவில் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
⚡அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்ற அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்.
⚡ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் Weightage முறையை மாற்றியமைத்து நியமனம் செய்யப்பட வேண்டும்.
⚡தொடக்கக்கல்வி துறையில் அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய உரிய ஆணை வெளியிடுதல்.
⚡புள்ளி விவரங்கள் வலைதளத்தில் பதிவு செய்தல் முற்றிலும் ஆசிரியர்களைக்கொண்டு செய்தலை தவிர்க்க வேண்டும்.
⚡வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒரு சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மீது இயக்குநருக்கு அனுப்பப்பட்ட புகார் மணுவை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
⚡பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்குதல் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்தல்.
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_33.html
தோழமையுடன்:
செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment