*இயக்குனர் அலுவலகம் முற்றுகை : BRTE சங்க தலைவர் எச்சரிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/brte.html
*🌟 பொங்கலுக்கு பின், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தா விட்டால், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், ராஜ்குமார் தெரிவித்தார்.*
*திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது:*
🌟 பணி மாறுதல் மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை, 2017, அக்., 31ல் வெளியிடப்பட்டது. இன்று வரை நடக்கவில்லை.
🌟 உடனடியாக கலந்தாய்வு நடத்த கோரி, வரும் நாட்களில், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வோம். இன்னும் நான்கு நாட்களில், நடவடிக்கை எடுக்கா விட்டால், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
🌟 பொங்கல் விடுமுறைக்கு பின், அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்களை திரட்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
🌟 வள மைய ஆசிரியர்களுக்கு, 2013க்கு பின், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.
🌟 இதனால், 3,000 ஆசிரியர்கள், குடும்பத்தை பிரிந்து சிரமப்படுகிறோம். உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டும், அதிகாரிகள், உத்தரவை அமல்படுத்த தயங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment