🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf.html
*🌟 போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்,*
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் தோழர்.ச.மோசஸ், பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர், பொருளாளர் தோழர்.ஜுவானந்தம் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:*
🌟 தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.
🌟 தங்களது எதிர்கால வாழ்வாதாரப் பிரச்சனையான ஓய்வூதியப் பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும்.ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 7000 கோடி ரூபாயை உரிய முறையில் ஊழியர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19500 வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் முழுக்க முழுக்க சரியான, நியாயமான போராட்டம் ஆகும்.
🌟 தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு முறையீடுகள், போராட்டங்கள் நடத்திய பின்பும் அரசு கண்டுகொள்ளாத நிலையில் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் ஆகும். எனவே தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் ஊழியர்களின் நலன், பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக *_TNPTF அயன்_* வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment