Wednesday, 28 February 2018
*தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_40.html
*🌟2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி குறித்து தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
*🌟தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "கேள்வி எனும் கலை" என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.*
*🌟மாநில அளவிலான பயிற்சிகள் தெரிவுசெய்யப்பட்ட ஆறு மாவட்டங்களில் நடைபெற உள்ளன. இதற்கான மாநில, மாவட்ட மற்றும் வட்டார வளமைய அளவில் பயிற்சிகளை வழங்கிடும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*+2 தேர்வு - நாளை முதல் தொடக்கம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/2.html
*🌟பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 6,903 பள்ளிகளின் 8,66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 4,03,176 மாணவர்களும், 4,63,758 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 40,682 பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். இரு மாநிலங்களில் 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.*
*🌟நாளை தொடங்கும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் மற்றும் தயார்ப்படுத்தும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 *நாளை (01.03.2018) +2 பொதுத்தேர்வு எழுதச்செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றியடைய *_TNPTF அயன்_* *சார்பாக உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்ந்த இரங்கல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_94.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும்,நமது இயக்கத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவருமாகிய தோழர்.போடி பொன்னையா அவர்களின் துணைவியார் அவர்கள் 26.02.2018 அன்று இயற்கை எய்தினார்*
*🌟நமது இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும்,இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொருளாளருமாகிய தோழர்.தி.கண்ணன்,மாநிலத் தலைவர் தோழர்.ச.மோசஸ் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்*
*🌟நமது இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.கே.ஏ.தேவராஜன்,முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ந.பர்வதராஜன்,முன்னாள் மாநில பொருளாளர் தோழர்.நாகப்பன் ஆகியோர் உள்ளிட்ட நமது இயக்கத்தின் தேனி மாவட்டத் தோழர்கள் நேரில் சென்று துயரத்தில் பங்கேற்றனர்*
*🌟அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது*
இவண்
*மாநில மையம்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*_TNPTF அயன்_* *சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_82.html
*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.*
🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,
*🌟 மாவட்டத் தலைவர்:*
தோழர்.பே.தீனன்
*🌟 மாவட்டச் செயலாளர்:*
தோழர்.ப.வாஞ்சிநாதன்
*🌟 மாவட்டப் பொருளாளர்:*
தோழர்.த.முருகன்
*🌟 மாவட்ட துணைத் தலைவர்:*
தோழர்.மு.இரவிச்சந்திரன்
தோழர்.பொன்.குபேந்திரன்
தோழர்.சி.வேணி
*🌟 மாவட்ட துணைச் செயலாளர்:*
தோழர்.மு.சேதுபதி ராஜா
தோழர்.தே.சுந்தர்
தோழர்.P.லூர்து மெர்சி கீதா
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/t-n-p-t-f-httpstnptfayan_28.htm
*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.*
🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,
*🌟 மாவட்டத் தலைவர்:*
தோழர்.L.மணி
*🌟 மாவட்டச் செயலாளர்:*
தோழர்.பெ.ச.அமர்நாத்
*🌟 மாவட்டப் பொருளாளர்:*
தோழர். M.B.சுரேஷ்குமார்
*🌟 மாநில செயற்குழு உறுப்பினர்:*
தோழர்.N.ஞானசேகரன்
*🌟 மாவட்ட துணைத் தலைவர்:*
தோழர்.R.சுந்தரி
தோழர்.A.J.ஜனார்த்தனன்
தோழர்.S.பாமா
*🌟 மாவட்ட துணைச் செயலாளர்:*
தோழர்.S.மணிவண்ணன்
தோழர்.V.C.பாபு
தோழர்.T.புவனேஷ்வரி
*🌟 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*
தோழர்.S.R.சிவராஜ்
தோழர்.T.பிரபாகரன் பிரேம்குமார்
தோழர்.S.கிருபாகரன்
தோழர்.R.குமார்
தோழர்.J.அறிவண்ணல்
தோழர்.J.சாந்தகுமார்
தோழர்.P.பரசுராமன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 27 February 2018
*குடும்பக் கட்டுப்பட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_38.html
🌟 அரசு ஊழியர் ஒருவரின் மனைவி குடும்ப நல அறவை சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து, அரசு ஊழியருக்கு மருத்துவச் சான்றின் பேரில் 7 நாள் இவிவிடுப்பு வழங்கப்படும். முதல் அறுவைசிகிச்சை பயன் அளிக்காத போது, மனைவி இரண்டாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டாலும் 7 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம். -(அரசு ஆணை எண் 470, நிர்வாக துறை, நாள்: 14.11.1990).
🌟 சில்லரை செலவின பணியாளருக்கும் இவ்விடுப்பு வழங்கலாம். (அரசாணை எண்-1452, நல்வாழ்வுத்துறை, நாள்:14.07.1982).
🌟 இந்த விடுப்புடன் அரசு விடுமுறை அல்லது பிற விடுப்புகளையும் சேர்த்து எடுக்கலாம். இந்த விடுப்புகளை சாதாரணமாக விடுப்பு வழங்கும் அலுவலரே வழங்கலாம். (அரசு ஆணை எண்- 356, நல்வாழ்வுத்துறை, நாள்:22.02.1982).
🌟 திருமணம் ஆகாத அல்லது இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளவர் Recanalization Operation செய்து கொண்டால், மருத்துவ சான்றின் பேரில் 21 நாட்கள் விடுப்பு வழங்கலாம் (அரசு விடுமுறையும் சேர்த்து), இந்த விடுப்பை பிற விடுப்புகளுடன் சேர்த்தும் எடுக்கலாம். (அரசாணை எண்- 2323, நல்வாழ்வுத்துறை, நாள்: 28.12.1981).
🌟 ஆண் அரசு ஊழியர் குடும்ப நல சிகிச்சை செய்து கொண்டால் 8 நாட்கள் விடுப்பு மட்டுமே வழங்கப்படும். (அடிப்படை விதி இணைப்பு விதியின் (I) ல் உள்ள துணை விதி 7(ஏ) ன் கீழ்).
🌟 பெண் அரசு ஊழியர் Non-Puerperal sterllisation அறுவை சிகிச்சை செய்துகொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்கலாம். பேறு காலத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு கிடையாது. (மேற்படி விதி)
🌟 தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண் -299, நல்வாழ்வுத்துறை, நாள்:10.03.1982).
🌟 சில நேரங்களில் அறுவைசிகிச்சை காரணமாக மேற்படி விடுப்பிற்கும் அதிகமாக சிறப்பு விடுப்பு தேவைப்பட்டால், மருத்துவ அலுவலரின் சான்றின் பேரில் அதிகமான விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண்-644, நல்வாழ்வுத்துறை, நாள்- 25.03.1982).
🌟 சாதாரண விடுப்பு வழங்கும் அலுவலரே இந்த விடுப்பை வழங்கலாம். (அரசாணை எண்- 356, நல்வாழ்வுத்துறை, நாள்: 22.02.1982).
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*அரசு ஊழியர்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_54.html
🌟 அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தைக் கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை, பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டியதுமில்லை. (அரசாணை எண் -3158/ பொதுப்பணியாளர்கள்/ துறை, நாள்:27.09.1974).
🌟 அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் படி , அரசு ஊழியர்கள் அசையா சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருளாக வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண்-45679/ A/ 1996, நாள்: 17.04.1996).
🌟 பரம்பரை சொத்துக்களிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண் - 7143/ பணி/ ஏ/ 85-6, நிர்வாகத்துறை நாள்: 14.05.1985).
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_53.html
🌟அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
🌟'பால் ஆதார்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீள நிறத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 5 வயது வரை இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
🌟குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பயோமெட்ரிக் தகவல்களை இணைக்க வேண்டும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.
🌟குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_54.html
🌟இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
🌟இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.
🌟இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.
🌟தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
🌟நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.
🌟அழைக்க வேண்டிய எண் - 155223
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி -களையப்பட வழி என்ன?*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_70.html
தோழர்.செ. நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
🌟 கவிஞர் ’சிற்பி’ எழுதிய ‘சர்ப்பயாகம்’ கவிதையில் சித்தரித்துள்ளது போல, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திலேயே அரசால் இழைக்கப்படும் அநீதியால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுப் பேரிழப்புக்கு உள்ளாகி வருபவர்கள் இடைநிலை ஆசிரியர்களே. அதிலும் குறிப்பாக 1.1.2006க்குப்பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படும் வரலாறு 1960 முதல் ஒவ்வொரு ஊதியக்குழுவையும் தொடர்ந்து அமைக்கப்பட்ட அலுவலர்குழுவால் ’பரமபத சோபான’விளையாட்டாகத் தொடர்கதை யாகிவருகிறது
🌟 1.11.1957 முதல் 31.5.1960 வரை இடைநிலை ஆசிரியர்களும், இளநிலை எழுத்தர்களும் பெற்றுவந்த ஊதியவிகிதம் 45-4-60-2-90 ஆகும். இளநிலை எழுத்தர்களாக நியமனம்பெற அன்றைய பள்ளியிறுதியான 11ஆம் வகுப்பு என்ற பொதுக்கல்வித் தகுதி வேண்டும். ஆனால், இடை நிலை ஆசிரியராக வேண்டுமானால் 11ஆம் வகுப்பு என்ற பொதுக்கல்வித் தகுதியோடு (தற்போது +2) இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புக் கல்வித்தகுதியும் கட்டாயம் தேவை. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகள் ஆசிரியர்பயிற்சி என்ற சிறப்புத் தொழிற்கல்வித்தகுதிக்கு ஊதிய நிர்ணயத்தில் எந்த மதிப்பும் தரப்படவில்லை.
*முதல் ஊதியக்குழு*
🌟 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலித்துப் புதியஊதிய விகிதங்களைப் பரிந்துரைக்க தமிழ்நாட்டில் முதல் ஊதியக் குழு 1959ல் நியமிக்கப்பட்டபோது முதல் ஊதியக்குழுவின்முன் ஆசிரியர் கூட்டணியின் நிறுவனத் தலைவர் மாஸ்டர்.வா.இராமுண்ணி ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புக் கல்வித் தகுதியைக் கணக்கில்கொண்டு உயர் ஊதிய விகிதம் அளிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நியாயங் களை முதல் ஊதியக்குழு ஏற்றுக்கொண்டது. ‘It has been generally conceded that the present scales of pay of teachers are low in relation to their responsibilities and that the profession is not attracting the best talents in the country. It has been urged before us that, it is only those who fail to secure suitable employment elsewhere that turn to teaching and that the present state of affairs cannot be remedied unless the present scales of pay of teachers are stepped up appreciably. We feel that the present grievances of teachers are genuine and that their emoluments should be considerably raised to secure the necessary improvement in standards of instruction in our school at all levels with in sources available.’(Page 94, Chapter 20, Para 13)
We therefore recommended a revised scale of pay.
🌟 ஆனாலும்’தமிழ் நாட்டின் நிதி நிலைகருதி தற்போது உயர் ஊதியவிகிதம் அளிக்க இயலவில்லை: இதை அடுத்த ஊதியக்குழு பரிசீலிக்க வேண்டும்’ என்ற பரிந்துரையை அளித்தது.
🌟 இடைநிலை ஆசிரியர்களுக்கும், இளநிலை எழுத்தர்களுக்கும் 90-4-110-3-140 என்ற ஊதியவிகிதங்களை 1.6.1960 முதல் நடைமுறைப் படுத்தியது. பணியில் சேரும்போது ஆண்டு ஊதிய உயர்வு ரூ.4/ ஆகவும், அனுபவமும் திறமையும் பெற்றபிறகு ஆண்டு ஊதிய உயர்வு ரூ.3/ஆகக் குறையும் விந்தை இங்கும் தொடர்ந்தது.
*இரண்டாம்ஊதியக்குழு*
🌟 1969ல் நியமிக்கப்பட்டு 2,10.1970ல் நடைமுறைக்குவந்த இரண்டாம் ஊதியக்குழுவின்முன் மாஸ்டர் வா.இராமுண்ணி முதல் ஊதியக்குழு ஆசிரியர்களுக்கு உயர் ஊதியவிகிதத்தை அளிக்கவேண்டும் என்று 1960ல் பரிந்துரைத்ததை எடுத்துக்காட்டி ஆசிரியர்களுக்கு உயர் ஊதியவிகிதம் அளிக்குமாறு வலியுறுத்தினார்.
🌟 ‘ஒரே பள்ளியில் படித்த இருவர் பள்ளியிறுதியான 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் ஒருவர் 1960ல் உருவான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்நிலைஎழுத்தராக (Lower Division Clerk) (தற்போதைய இளநிலை எழுத்தர்-Junior Grade Assistant) 90-4-110-3-140 ஊதியவிகிதத்தில் பணியில் சேர்கிறார். மற்றவரோ, கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்: நாட்டின் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு ஆசிரியராக வேண்டு மானால், இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆதாரப்பயிற்சி யில் கற்பித்தல்முறைகள், குழந்தைஉளவியல் ஆகியவற்றில் தேர்ச்சி என்ற சிறப்புத்தொழிற்கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். 1960-62ல் ஆசிரியர்பயிற்சிபெற்றுத்தேறி, 1962ல் ஆசிரியராக நியமனம் பெறும்போது அவருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.90/ அளிக்கப் படுகிறது. ஆனால் அப்போது ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தராக உள்ள அவரது நண்பரோ இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுகளைப் பெற்று அடிப்படை ஊதியமாக ரூ.98/ பெற்றுக்கொண்டிருப்பார்.
🌟 ‘ஆசிரியர் பணி அறப்பணி: அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற உயரிய நோக்கத்தோடு இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புத் தொழிற்கல்வித்தகுதி பெற்றுவந்தவர், அத்தகைய பயிற்சி எதுவும்பெறாத தனது நண்பரைவிட ரூ.8/ குறைவான ஊதியம் பெறுவார்! ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புத்தொழிற்கல்வித்தகுதி தண்டனை ஆகலாமா?’ என மாஸ்டர் இராமுண்ணி சித்தரித்துக் காட்டியது இரண்டாம்ஊதியக்குழுவை அசைய வைத்தது. இளநிலை எழுத்தர்களுக்கு 200-5-245-10-325 எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 210-5-245-10-325 எனவும் நிர்ணயம் செய்து அறிவித்து நடைமுறைப் படுத்தியது
*ஒரு நபர்குழு*
🌟 ஆனால் ஊதியக்குறைகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர்குழுவால் இளநிலை எழுத்தருக்கும் 210-325 என ஊதியம் சமமாக்கப்பட்டது. ஆசிரியர்பயிற்சி என்ற கூடுதல் தொழிற்கல்வித் தகுதி புறக்கணிக்கப் பட்டது. இடைநிலைஆசிரியர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டது.
*மூன்றாம்ஊதியக்குழு*
🌟 முதல் ஊதியக்குழு விலைவாசிப்புள்ளி 100ஐ அடிப்படையாகக்கொண்டும், இரண்டாம்ஊதியக்குழு விலைவாசிப்புள்ளி 200ஐ அடிப்படையாகக் கொண்டும் அமைந்தன. 1978ல் 320 விலைவாசிப்புள்ளியைக்கொண்டு மூன்றாம் ஊதியக்குழுஅமைக்கப்பட்டது.1970முதல் 1978 வரையான காலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்திய காலமாகும். 8 புள்ளி விலைவாசி உயர்ந்தால் ஒருதவணை அகவிலைப்படி அளிப்பது மத்திய, மாநிலஅரசுகள் ஏற்று நடைமுறைப்படுத்திய அகவிலைப்படி கொள்கை. 1970 முதல் 1978வரை உயர்ந்த விலைவாசிப்புள்ளிகள் 120. ஆகும். இதன்படி மத்திய அரசு 15 தவணை அகவிலைப்படிகளை அளித்தது. ஆனால் தமிழக அரசோ 7தவணை அகவிலைப்படிகளை மட்டுமே அதற்கும் உச்சவரம்பு விதித்து அளித்தது. இதனால் மூன்றாம் ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம்+7தவணை அகவிலைப்படி மட்டுமே சேர்க்கப்பட்டு வெறும் 5% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதன்விளைவு என்னவானது?
🌟 மத்தியஅரசின் 8ஆவது நிதிக்குழு இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊதியங்களை ஆய்வுசெய்து ‘இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுபவர்கள் தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்ற அவலநிலையைச் சுட்டிக்காட்டியது. இவர்களுக்கு ‘அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கவேண்டுமானால் தற்போது பெற்றுவரும் ஊதியம் 25% உயர்த்தப்படவேண்டும். இதற்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு ஊதியத்துக்காக ரூ.501.34 கோடியும், அகவிலைப்படிக்கு ரூ.294.8 கோடியும் அளிக்கவேண்டும்’ என்று பரிந்துரைத்தது. (பார்க்க: இந்தியன் எக்ஸ்பிரஸ் 1984 செப்டம்பர் 3 :Finance panel provides 500 cr. For pay revision –TN Staff ‘the lowest paid’)
*தமிழக அரசின் நான்காவது ஊதியக்குழு*
🌟 தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கப்பட குறைந்தபட்சம் 25% ஊதியஉயர்வு அளிக்க மத்தியஅரசு நிதியளித்திருந்தபோதும் தமிழகஅரசோ நான்காவது ஊதியக்குழுமூலம் 1.10.1084 முதல் 7% ஊதிய உயர்வுமட்டுமே அளிப்பதாக 26,5,1985ல் அறிவித்தது: 18% உயர்வை வஞ்சித்தது. இந்த உண்மையை அறியாமல் பலஆசிரியர் மற்றும் அரசுஅலுவலர் சங்கங்கள்’வாரிக்கொடுத்த வள்ளலே வாழ்க’என்று அன்றைய முதல்வரை வாழ்த்தின. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், அரசு ஊழியர் சங்கமும் மட்டுமே ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து,’ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வஞ்சிக்கப் பட்டுள்ளார்கள்’ எனஅறிவித்தன. இந்த அநீதியை எதிர்த்துப்போராட 1985ல்’ஜாக்டா’,’ஜேக்டி’அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. 1985 செப்டம்பர் 5 ஆசிரியர்தினத்தை துக்க நாளாக அறிவித்தன:ஆசிரியர்களை வஞ்சித்த அரசு ஆணை எண் 555ஐ எரிக்கும் போராட்டத்தை 1985 நவம்பர் 3ல் நடத்தின. அகில இந்திய சராசரி ஊதியம் அளிக்கவேண்டி15,000 பெண்ஆசிரியர்கள் உட்பட 65,000 பேர் சிறைசென்றனர். தீபாவளித் திரு நாளிலும் ஆசிரியர்கள் சிறைவைக்கப்பட்டார்கள்.
*மீண்டும் ஒரு நபர்குழு*
🌟 அகில இந்திய சராசரி ஊதியத்தை எவ்வாறு அளிப்பது என்பதற்காக ஒரு நபர் குழுவை அரசு நியமிக்கத்தது. ஆனால் இந்தக்குழுவோ‘ஜேக்டி’ யில் இணைந்திருந்த ஆசிரியர் சங்கங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில வெற்று சலுகைகளை மட்டுமே பரிந்துரைத்தது. 65,000 பேர் தீபாவளித் திருநாளிலும் சிறையிருந்தது அலட்சியப்படுத்தப்பட்டது. அகில இந்திய சராசரி ஊதியம் அளிக்கப்படாத அநீதி தொடர்ந்தது.
🌟 மத்திய அரசின் நான்காவது ஊதியக்குழு1.1.1986 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்தக்குழு ”ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலித்துள்ள சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அளிக்கப் பட்டுள்ளன. அவை மத்திய அரசால் எந்த நேரத்திலும் நடைமுறைக் குக்கொண்டுவரப்படலாம் எனவே நாங்கள் ஆசிரியர்களின் ஊதிய நிலை களை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த பழைய ஊதியங்களுக்கு புதிய ஊதியவிகிதங்களை மட்டுமே தந்துள்ளோம்’ என அறிவித்தது. அதன்படி மத்தியஅரசின் இடைநிலை ஆசிரியர் 1200-30—1560-40-2040 ஊதியவிகிதம் பெற்றனர். அப்போது தமிழ்நாட்டில் இடைநிலைஆசிரியர் ஊதியவிகிதம் 610-20-730-25-955-30-1075 தான்!
*ஜேக்டீ பேரமைப்பு*
🌟 ’இனி எங்களுக்குவேண்டியது ‘அகில இந்திய சராசரி ஊதியமல்ல: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தான்’ என ஜேக்டீ கோரிக்கையை மாற்றி ஆசிரியர்களை மீண்டும் போராட்டகளத்துக்கு அணிதிரட்டியது. 1985ஜேக்டீ போராட்டத்தில் ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்ட அனுபவங்களை பரிசீலித்து, நியாயங்களை நிலை நாட்டி அரசை ஏற்க வைக்க அரசு ஊழியர்களும் இணைந்த ‘ஜேக்டீ பேரமைப்பை உருவாக்கியது.
*தமிழக அரசின் ஐந்தாம்ஊதியக்குழு*
🌟 1988ல் ‘ஜேக்டி அரசு ஊழியர் பேரமைப்பு உருவாகி ‘மத்திய அரசுக்கு இணையான ஊதியவிகிதம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது.. தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு வீழ்ந்தபின் ஆளுநர் ஆட்சியில் இறுதியாக 1988 ஜூன்22 முதல் ஜூலை 22வரை வேலை நிறுத்தப்போராட்டமும், ஜூலை 22 அன்று ’சென்னைகோட்டை முற்றுகைப் போராட்டமும்’ வரலாறு காணாதவகையில் நடைபெற்றன.
.🌟 ஆளுநர் அலெக்சாண்டர்அரசு ஜேக்டி பேரமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.’ ‘Government agree in principle that the demand for pay parity with Central Government employees and teachers and one month’s bonus are to be considered by the elected Government on the basis of the recommendations of the Vth pay commission. Accordingly the Vth Pay Commission will be constituted to go in these matters along with other terms of reference.’ என்று ஒப்புக்கொண்டது.
🌟 ஆளுநரின் ஆலோசகர்ஜி.விஇராமகிருஷ்ணா,தலைமைச்செயலாளர் எம்.ராஜேந்திரன், கல்வித் துறைச்செயலாளர் ஹெச்.பி.என்.ஷெட்டி, நிதித்துறைச் செயலாளர் ஏ.எம்.சுவாமிநாதன், நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர் இலட்சுமி பிரானேஷ் ஆகியோர் கையொப்பமிட்டு எழுத்துமூலமான ஒப்பந்தத்தை அளித்தனர். ஐந்தாம் ஊதியக்குழு நியமிக்கப்பட்டது. 1.6.1988 முதல் தமிழ் நாட்டில் மத்திய அரசு ஊதியம் நடைமுறை உண்மையானது. பள்ளியிறுதி என்ற கல்வித்தகுதிக்கு 975-1500-ம், இடைநிலை ஆசிரியருக்கு 1200-2040ம் ஊதியவிகிதங்களாகின.இடைநிலைஆசிரியர்கள் நீண்ட போராட்டத்துக் குப் பின் ஏற்றம்பெற்றார்கள.
🌟 நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில்
மத்திய அரசின் நான்காம்ஊதியக்குழு
🌟 தமிழகஅரசு மத்திய அரசு ஊதியவிகிதங்களைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதை எழுத்துமூலமான ஒப்பந்தமாக ஏற்றுக்கொண் டுள்ளதால் இனிமேல் எதிர்காலத்திலும் தமிழ் நாட்டில் மத்திய அரசின் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறையாகும் என நம்பிக்கை கொண்டிருந்த ஆசிரியர்களுக்குப் பேரிடியாக மத்தியஅரசு நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் நியமித்த 5ஆம் ஊதியக்குழு அறிவிப்பு அமைந்தது. அந்தக்குழுவின் பரிந்துரை வரையறைகளில் (TERMS OF REFERENCE)ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரமே அளிக்கப்படவில்லை. எனவே ஊதியக்குழுவின் தலைவர் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்க மறுத்தார்.
🌟 இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான டிட்டோஜேக் மத்திய அரசுக்கு ‘ நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் குழுவுக்கு ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான தொலைநகல் (ஃபேக்ஸ்) செய்திகளை அனுப்பியது செ.நடேசன் தலைமையில் டிட்டோஜேக் தலைவர்கள் 1996 ஆகஸ்ட் 4 முதல் 10 முடிய புதுடெல்லியில் ஒருவாரகாலம் தங்கி மத்திய அமைச்சர்களையும், (பிரதமர் தேவேகௌடா தமது தாயார் உடல் நிலைகாரணமாக கர்நாடகம் சென்றுவிட்டதால் சந்திக்க இயல வில்லை.பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது) அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஏ.பி.வாஜ்பேயி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்தனர். டொராண்டோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுவிழாவுக்குச் சென்று திரும்பிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையை விமான நிலையத்திலேயே ஆகஸ்ட் 9 அன்று சந்தித்து ஊதியக்குழுவின் பரிந்துரை வரையறைகளில் ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் அளிக்கக்கேட்டுக் கொண்டார்கள். அமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை இரண்டு நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார். ஆகஸ்ட் 10 சனி அன்று நீதிபதி இரத்தினவேல் பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் இரண்டு நாட்களில் வரவுள்ளதைத் தெரிவித்தனர். அவரிடம் மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழு ஆசிரியர்களின் ஊதிய நிலைகளைப் பரிசீலிக்காமல் பழைய ஊதியங்களுக்கு புதிய ஊதியத்தை மட்டுமே அளித்திருந்தததைச் சுட்டிக்காட்டினர். இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்றாம் ஊதியக்குழு வில் அளிக்கப்பட்ட 330-1600 என்ற பழைய ஊதியவிகிதத்துக்கு 1200-2040 அளிக்கப்பட்டது (இந்த விவரங்களைத் தமிழ் நாட்டு ஆசிரியர்களுக்கு விளக்கிட சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரைகளைசெ. நடேசன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்) ஆனால் சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரையான 500- 3950 தொடர் ஊதியவிகிதத்தில் 500-25-700-30-1,000 என்ற இடை நிலை ஆசிரியர் ஊதியவிகிதத்துக்கு 1.1.1986முதல் 1640-2900 ஊதியவிகிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதைக்கணக்கில் கொண்டு 1640-2900க்கு புதிய ஊதியவிகிதமாக 1.1.1996முதல் 5500-8300 ஊதியவிகிதம் அளிக்கக் கேட்டுக்கொண்டார்கள். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்குழு இந்தவேண்டுகோளில் பாதியளவான 50%ஐ மட்டும் ஏற்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.1986 முதல் 1400-2600 ஊதியவிகிதம் அளிக்கப்பட்டதாகக்கருதி 1.1.1996 முதல் 4500-7,000 ஐ நிர்ணயித்தது.
*தமிழகஅரசின் ஆறாவது ஊதியக்குழு*
🌟 தமிழ்நாட்டில் முதல்முறையாக 1.6.1988 முதல் மத்திய அரசு ஊதியவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது’எள்ளளவும், எள்ளின்முனையளவும்கூட குறைவுபடாமல் மத்திய ஊதியம் அளிக்கப்படும்’ என்று சட்டமன்றத்தில் 24.5.1989ல் நிதிநிலை அறிக்கையின்போது தெரிவித்தவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. ஆனால் அவரே மத்திய அரசின் ஐந்தாம் ஊதியக்குழு ஊதியவிகிதங்களைத் தமிழ்நாட்டில் ஆறாவது ஊதியக்குழு அமைத்து 1.6.1998 முதல் நடைமுறைப்படுத்தியபோது,’மத்திய அரசில் சில பிரிவினருக்கு கூடுதலாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே இங்கு அளித்தால் அரசு அலுவலாளர் ஏற்கமாட்டார்கள்’ என்று கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியக்குழு அளித்த 4500-76000 ஊதியவிகிதத்தை 4,000-6,000 எனக் குறைத்து அறிவித்தார்! இந்த அறிவிப்பை டிட்டோஜேக் ஏற்கமறுத்தது ஜேக்டி-பேரமைப்பின் போராட்டத்தின்மூலம் பெற்ற மத்திய அரசு ஊதியவிகிதத்தைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என மாபெரும் பேரணியை 28.5.1999ல் சென்னையில் நடத்தியது. பேரணியின் முடிவில் டிட்டோஜேக் தலைவர்களை அழைத்துப்பேசிய முதல்வர் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500-7000 ஊதியவிகிதம் அளிக்கப்படும் என உறுதியளித்து ஆணை பிறப்பித்தார்.இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்படவிருந்த அநீதி தவிர்க்கப்பட்டது.
*மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு*
🌟 5,10,2006ல் மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை நியமித்தது. இக்குழுவின்முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ‘ஐந்தாம் ஊதியக்குழு வில் சட்டோபாத்யாயாகுழுவின் பரிந்துரைகள் 50% அளவுக்கே ஏற்கப் பட்டதைச் சுட்டிக்காட்டியது. 1.1.1996முதல் இடை நிலை ஆசிரியர்களுக்கு 6500-10500 ஊதியவிகிதம் வழங்கியதாகக் கருதி அதற்கேற்ப இடை நிலை ஆசிரியர்களின் புதிய ஊதியவிகிதத்தை நிர்ணயிக்கக் கேட்டுக்கொண்டது.
🌟 மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு இதனை ஏற்றுக்கொண்டது. ’In order to attract better teachers and to retain them in the government, the commission is inclined to recommend a higher start for primary teachers. This is along with the restructuring of the existing pay scales of teachers’ என்று அறிவித்து இடைநிலைஆசிரியர் ஊதியத்தை 6500-10500 என்ற பழைய ஊதியவிகிதத்துக்கு புதிய ஊதியமாக ஊதியக்கட்டு 2ல் வ.எண். 12ல்(PB 2 S.No. 12) உள்ள 9300-34,800 ஊதியவிகிதத் தையும் 4200 தர ஊதியத்தையும் (Grade Pay)நிர்ணயித்தது.(அடிப்படை ஊதியம் 9300+தர ஊதியம்4200=மொத்தம் ரூ13500)
*தமிழகஅரசின் ஏழாவது ஊதிய (அலுவலர்)குழு*
🌟 ஆனால் தமிழக அரசின் ஏழாவது ஊதிய அலுவலர்குழுவோ மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு இடை நிலை ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை 6500-10500 என உயர்த்திநிர்ணயித்ததைக் குறைத்து 4500-7000 என்ற பழைய ஊதியத்துக்கு புதிய ஊதியமாக ஊதியக்கட்டு 1ல் வைத்து 5200-20200 ஊதியவிதத்தையும் ரூ.2800 தர ஊதியத்தையும் நிர்ணயித்தது மத்திய அரசு நிர்ணயித்த 9300-34,800 ஊதியவிகிதத்தையும் 4200 தர ஊதியத்தையும் குறைத்து. 1.1.2006க்குப்பின் நியமனம்பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் அரசு ஆணை எண்.234 நிதி (ஊதியக்குழு) நாள்:1.6.2009ன் படி அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 = ஆகமொத்தம்ரூ8000 மட்டுமே நிர்ணயம் பெற்றார்கள். இவர்கள் ஏற்கனவே பழைய ஊதியவிகிதத்தில் ரூ.8370/ பெற்றுவந்தவர்கள்! இவர்கள் பழைய ஊதியத்தில் அதிகம்பெற்ற ரூ.370/ தனி ஊதியமாக (Personal Pay)வைக்கப்பட்டு அடுத்துவரும் ஆண்டு ஊதிய உயர்வுகளில் கழித்துக்கொள்ளப்படும் என்ற விநோதமும் அரங்கேறியது. மத்திய அரசு நிர்ணயித்த ரூ.13,500’க்குப்பதிலாக தமிழ் நாட்டில் ரூ8,000/ மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,500/ ம் அதற்குரிய அகவிலைப்படி இழப்பும் இடை நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது.
*மீண்டும் அலுவலர்குழு*
🌟 இந்த மாபெரும் அநீதி அரசுக்குச்சுட்டிக்காட்டப் பட்டபோது இந்தக் குறைபாட்டைக் களைய அலுவலர்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவோ’மத்திய அரசில் இடை நிலை ஆசிரியர்கள் +2 பொதுக்கல்வித் தகுதியும், ஆசிரியர் பயிற்சியும் பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் இடை நிலை ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு பொதுக்கல்வித்தகுதிபெற்று ஆசிரியர் பயிற்சிபெற்றவர்கள்’ என்ற பொய்யான தகவலை அரசுக்குத் தந்தது. ஆகவே அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 அளித்தது சரிதான் என மாபெரும் அநீதியை நியாயாப்படுத்தியது. எனவே ரூ.750/ மட்டும் தனி ஊதியமாக கருணையோடு அறிவிக்கப்பட்டது! தமிழ் நாட்டில் இடை நிலை ஆசிரியர்கள் +2 பொதுக்கல்வித்தகுதியுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மைநிலையைக் குழிதோண்டிப் புதைத்து இடைநிலை ஆசிரியர்களின் இந்த இழப்பு வாழ்நாள் முழுதும் தொடரும் இழப்பாவதற்கான அடித்தளத்தை இந்த அலுவலர்குழு உருவாக்கிவிட்டது.
🌟 மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவும்
தமிழக அரசின் எட்டாவது ஊதிய அலுவலர்குழுவும்
மத்தியஅரசு தனது ஏழாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் களுக்கு பழைய ஊதியவிகிதமான 9300-34,800 + 4200 தர ஊதியத்துக்கு 35,400-1,12,400 ஊதியவிகிதம் என மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தியது.
ஆனால் தமிழக அரசு நியமித்த எட்டாவது ஊதிய அலுவலர்குழுவோ ஏழாவது ஊதியக்குழுவில் அ நியாயமாகக் குறைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 ஐக் கணக்கில்கொண்டு 1.1.2016 முதல் 20,000-65,000 ஊதியவிகித்த்தையே அரசு ஆணை எண் 303 நிதி(ஊதியக்குழு) துறை நாள்: 11 அக்டோபர் 2017 மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.இதனால இனிவரும் ஆண்டுகளில் மாதம் ஒன்றுக்கு இடை நிலை ஆசிரியர்களுக்கு 15.500ம் அதற்கு உருய அகவிலைப்படியும் இழப்பாக, பேரிடியாக அமைய உள்ளன.
🌟 இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி எவ்வாறு அரங்கேறியுள்ளது? இதோ கவிஞர் சிற்பியின் கவிதை:
⚡சர்ப்பயாகம்
பரம பதத்துச்சோபான படம் எங்கள் தேசம் அதில்
கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக்கிடக்கின்றன.
⚡ஆதிசேஷன் கார்க்கோடகன் கண்ணாடிவிரியன்
கொம்பேறிமூர்க்கன் படங்கள் விரித்து
உடல்கள் நெளித்து காத்துக்கிடக்கின்றன.
⚡தாயங்கள் போட்டுநாங்கள் தொடங்கும்
ஒவ்வொருபயணத்தையும்
தடுத்துக் கடிக்க அடுத்துக் கெடுக்க
இத்தனை நாகங்களா?
⚡புறப்பட்ட திசைக்கேவிரட்டியடிக்கும்
இருட்டுத் தாரைகளே!பரமபதத்தின்
தடத்தை மறைக்கும் திருட்டுச் சாரைகளே!
⚡வழிவிடச் சொல்லிவிரல்கள் நடுங்கத் தாயம் உருட்டுகிறோம்..
உங்கள் வாயில்விழுந்து வாலில்வழிந்து ‘நேற்றை’ப் புரட்டுகிறோம்!
⚡எங்கோ சிலசில ஏணிகள்-அவற்றில்ஏறி நிமிர்ந்தவுடன்
சீறிய உங்கள் விஷ நாக்குகளின் ஈரத்தில் வழுக்குகிறோம்.!
🌟தமிழ் நாட்டில் அலுவலர்குழு என்னும் நச்சரவங்களால் இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையாப்பட 1.6.2006 முதல் அவர்களுக்கு 9300-34,800 ஊதியவிகிதத்தையும் 4200 தர ஊதியத்தையும் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தி 1.1.2016 முதல் பழைய ஊதியவிகித மான 9300-34,800 + 4200 தர ஊதியத்துக்கு1.1.2016 முதல் 35,400-1,12,400 ஊதியவிகிதம் என மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
*இதற்குவழி?*
*🌟இதோ கவிஞர் சிற்பி கவிதையின் முடிவுப்பகுதி:*
⚡நடுங்கி நடுங்கித் தாயக்கட்டைகள்உருட்டிக் காத்திருந்தால்
பரம பதத்தை ஒரு நாளும் நீர் அடைந்திட விடமாட்டீர்.
அதனால் நாகங்கள் அழிக்கும்யாகங்கள் தொடங்கினோம்கொடிய சர்ப்பயாகம்!
எமது சர்ப்ப யாகத்தில்சிறியது-குறியதுபெரியது- நெடியது
பூ நாகம் முதல் பொறி நாகம் வரைஅரியும்-எரிய்டும்கரியும்-கரியும்!
அந்த
எரிதழற் சாம்பலில்ஒருபரம பதத்தைஎங்கள் சிரம பதத்தால்
சிருஷ்டித்துக் கொடுப்போம்.ஏனெனில் இது‘ஜனமே ஜய’யுகம்!
*வேண்டுகோள்*
🌟 ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடக்கூடாது: அதுவும் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என நல்ல உள்ளம் கொண்டவர்களும், மாண்புமிகுநீதியரசர்களும் அறிவுரை வழங்கியுள்ளார் கள். அந்த அறிவுரைகளை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் ’தமிழக அரசு ‘Government agree in principle that the demand for pay parity with Central Government employees and teachers என ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எழுத்துமூலம் அளித்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வைப்பதும் இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வாழ் நாள் முழுதும் தொடரும் அநீதியை களைவதும் அவர்களது தார்மீகக் கடமை அல்லவா?
இந்தத் தார்மீகக் கடமை நிறைவேற்றப்படாவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் நியாயங்களுக்காக *அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ‘சர்ப்ப யாகங்களை’ மேற்கொள்வதைத்தவிர வேறு என்னசெய்ய?*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_71.html
🌟 ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
⚡ சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
*🌟ஆசிரிய இனத்தின் கோரிக்கை:*
*⚡பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை*
*⚡சென்னை: பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்*
*⚡அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது*
*⚡முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேச்சு நடத்துவது பற்றி வாக்குறுதி அளித்ததாக சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்*
*⚡இந்த அரசு நம்மை இப்படி தான் ஏமாற்றும் மாநில ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களே*
*🌟போராட்டம் ஒன்றே தீர்வு*
*⚡உயர் நீதிமன்றம் பச்சை கொடி காட்டி உள்ளது..எனவே ஒன்றுகூடி விரைவில் போராட்டம் அறிவியுங்கள்..*
*⚡போராட்டம் இல்லை என்றால்...⚡*
*⚡யார் ஆட்டமும் செல்லாது...⚡*
*⚡குழு அமைக்கிறேன் என்று பல வருடம் ஓடின...*
*⚡அதுபோல் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படும் என்று ஏமாற்றும் இந்த அரசுக்கு பாடம் புகட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்கள் களத்தில் கொண்டு வந்து போராட்டம் செய்வோம்..*
*⚡சிந்தியுங்கள்...ஒன்றுகூடி பேசுங்கள்.. நல்ல முடிவு எடுங்கள்..இடைவெளி விடாமல் போராட உக்திகளை வகுங்கள்..தொடர்ச்சியாக இருந்தால் வெற்றி நமக்குதான்..*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
*ஒன்றுபடுவோம்...*
*போராடுவோம்...*
*வெற்றி பெறுவோம்..*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 26 February 2018
*அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://drive.google.com/file/d/1mvHvS9JRefGs-w85kZ8c4-9zHFj039iF/view?usp=drivesdk
*🌟அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (2017-18) பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் வழங்குதல் சார்பாக மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
*🌟பயிற்சியின் நோக்கங்கள்:*
⚡அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தல்.
⚡குழந்தையின் உரிமைகள்.
⚡பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச்செய்தல்.
⚡பாலினப்பாகுபாடு.
⚡பேரிடர் மேலாண்மை.
⚡தரமான கல்வி.
⚡கற்றல் விளைவுகள்.
⚡உள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்.
⚡பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளி நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்.
⚡சமூகத் தணிக்கை.
⚡தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம்.
*🌟பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் (பள்ளி வாரியாக) மற்றும் எண்ணிக்கை:*
⚡பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1
⚡பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் (சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர்) - 1
⚡பெற்றோர் (நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட) - 2
⚡மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரிதிநிதி - 1
⚡ஆசிரியர் - 1
*🌟பயிற்சி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கான செலவின விபரம்:*
⚡உணவு - ரூ.50
⚡தேநீர் + சிற்றுண்டி - ரூ.16
⚡பயணப்படி - ரூ.20
⚡போட்டோ + பேனர் + TLM + கருத்தாளர் மதிப்பூதியம் - ரூ.14
⚡பயிற்சி கட்டகம் - ரூ.20
⚡ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மார்ச் 2018 மாதத்தில் 23 ம் தேதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கு - ரூ.180
*🌟குறிப்பு:*
⚡மதிய உணவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவினத்தொகையை பயிற்சியில் பங்கேற்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ரொக்க தொகையாக வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
*🌟மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை:*
⚡முதல் கட்டம் - 05.03.2018
⚡இரண்டாம் கட்டம் - 06.03.2018
*🌟பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவிலான பயிற்சி கால அட்டவணை:*
⚡முதல் கட்டம் - 12.03.2018
⚡இரண்டாம் கட்டம் - 14.03.2018
[பயிற்சி இந்த இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒரு கட்டம் (ஒரு நாள்) மட்டுமே பயிற்சி]
*🌟அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சம்மந்மான விரிவான விபரங்கள் மற்றும் படிவங்கள் அடங்கிய pdf வடிவிலான தொகுப்பு மேற்கண்ட Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.*
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_38.html
https://drive.google.com/file/d/1mvHvS9JRefGs-w85kZ8c4-9zHFj039iF/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*RTI - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - திரிபுராவில் தொடர்கிறது பழைய ஓய்வூதியத் திட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/rti.html
🌟 புதிய ஓய்வூதிய திட்டத்தில் திரிபுரா, மேற்குவங்கம் சேரவில்லை, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
மேலும்,
🌟 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது.
🌟 புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் பிடித்தம் செய்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இத் திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.
🌟தமிழகம் 2003 ஏப்ரல் 1 ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.
🌟 இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4152 பேர் விண்ணப்பிப்பதில் 1752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது.
🌟 இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் தோழர். பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
🌟 அதற்கு 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை, மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் தான் என ஆணையம் பதிலளித்துள்ளது.
🌟 இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை;
*இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*மின் கட்டணம் செலுத்த புதிய வசதி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_8.html
🌟 மின் வாரியம், 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' என்ற சேவையின் கீழ், மின் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்கியுள்ளது.
🌟 இது குறித்து, மின் வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:மின் கட்டண மையம், வங்கி கிளைகள், மின் வாரியத்தின், 'மொபைல் ஆப்' செயலி, அரசு, 'இ - சேவை' மையங்கள் மற்றும், தபால் நிலையங்களில், மின் கட்டணம் செலுத்தலாம்.
🌟 ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் ஆகியவை இணைந்து, பி.பி.பி.எஸ்., எனப்படும், 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' என்ற சேவையை துவக்கியுள்ளன.எந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்றாலும், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் என்ற பகுதி இருக்கும். அதில், நுழைந்தால், 'டான்ஜெட்கோ' இருப்பதை காண்பிக்கும்.
🌟 அதன் வாயிலாக, நாளை முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியுள்ளது. அதில், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் மின் கட்டணம் செலுத்தலாம்.மின் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகையை கண்டறிந்து, பணம் செலுத்தலாம். இந்த முறையில், இணையதளம் வாயிலாக, மின் கட்டணம் செலுத்த, கட்டணம் ஏதும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*அரசு செட்ஆப் பாக்ஸ் இலவச தமிழ் சேனல் லிஸ்ட்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_26.html
தமிழ் சேனல் லிஸ்ட் - அடேங்கப்பா இவ்வளவு சேனல் ப்ரீ டெலிகாஸ்ட் பண்றாங்க நாம பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான் சரியான செட் ஆப் பாக்ஸ் வாங்கிட்டால் இந்த அத்தனை சேனல்களும் உங்கள் வீட்டில், அதுவும் எந்த வித கட்டணமும் இன்றி நம்மால் இத்தனை சானல்களை பார்க்க முடியும்.
🌟 INTELSAT17@66.0E(C-BAND)
1) KALAIGNAR TV
2) KALAIGNAR ISAI ARVI
3) KALAIGNAR MURASU
4) KALAIGNAR SEITHIKAL
5) KALAIGNAR CHTHIRAM
6) KALAIGNAR SRIPPOLI
7) NEWS 7 TAMIL
8) CHANNEL UFX
9) CAPTAIN TV
10) CAPTAIN NEWS
11) PUTHIYATHALAI MURAI NEWS
12) SATHIYAM NEWS
13) TAMILAN TV
14) WIN TV
15) IMAYAMTV
16) MAKKAL TV
17) ANGEL TV HD ( Christian Program )
18) VASANTH TV
19) MATHA TV ( Christian Program )
20) DHEERAN TV
21) 7S MUSIC
22) MOON TV
23) SRI SANKARA TV
24) SHOPPING ZONE SHOPPING CHANNEL ( Tamil Audio Feed )
25) POLIMER TV
26) POLIMER NEWS
27) MK TELEVISION
28) VENDHAR TV
29) SALVATION ( Christian Program )
30) THANTHI NEWS
31) PUTHUYUGAM TV
32) POWER OF GOD TV ( Christian Program )
33) MEENAKSHI TV (Test Signal)
34) PEPPAR TV
35) SAHANA MUSIC( TEST RUN)
36) NAMBIKKAI TV( Christian ProgRam)
🌟 INTELSAT 20@ 68.5E(C-BAND)
1) SUPER TV MUSIC
2) LOTUS NEWS
3) SHALINI TV
4) SPLASH TV( Test Run )
5) HBNTV SHOPPING CHANNEL( Tamil Feed Audio )
6) PENGAL TV( Test Run )
7) KALVI TV( Test Run )
8) GREEN TV AGRI ( Test Run )
9) TUNE6 MUSIC
10) NAPPTOL TAMIL SHOPPING CHANNEL (MGK TV)
🌟 EUTELSAT70B@70.5E(KU)
1) DAN TAMIL OLI (Sri Lanka)
2) OHM TV HINDU (Sri Lanka)
3) PIRAI TV ISLAM (Sri Lanka)
4) DEEPAM TV (England & France)
5) THANTHI TV
6) SATHIYAM TV
7) NEWS 7 TAMIL
8) MOON TV
9) PEPPER TV
10) POLIMER TV
11) POLIMER NEWS
12) TAMILAN TV
13) DHERRAN TV
14) CAPTAIN TV
15) CAPTAIN NEWS
16) CHANNEL UFX
17) GULF TV TAMIL
18) MK TELEVISION
🌟 ABS2@75.0E(KU-BAND)
1) SATHIYAM TV NEWS
2) GREEN TV
🌟 APSTAR7@76.5E(C-BAND)
1) TAMIL FM(csn tv audio2) Sri lanka
🌟 INSAT4A/GSAT10@83.0E(C-BAND)
1) ASEERVATHAM TV (Christian Program)
2) SVBC (Tamil Feed Audio)
3) YES TV (ZONET TV)
4) CHRISTIAN TV(Test Run)
🌟 ST2@88.0E(KU-BAND)
1) AIR TAMIL (INDIA)
2) FM RAINBOW CHENNAI (India)
🌟 MEASAT 3/3A@91.5E(C-BAND)
1) KALAIGNAR ASIA
2) MINNAL FM (Malaysia)
🌟 INSAT4B@93.5E(C&KU-BAND)
1) DD PODHIGAI TV
2) AIR TAMIL ( India)
3) FM RAINBOW CHENNAI (India)
🌟 NSS6/SES7@95.0E(KU-BAND)
1) ZEE TAMIL
2) SRI SANKARA
3) CAPTAIN TV
4) KALAIGNAR TV
5) MURASU TV
6) SRIPPOLI TV
7) MAKKAL TV
8) ANGEL TV
9) ISAI ARUVI
10) VASANTH TV
11) ASSIRWATHAM TV
12) POLIMER TV
🌟 ASIASAT5@100.5E(C-BAND)
1) ANGEL TV FARCI (Christian Program)
2) ARRA TV( MANJARI TV)
3) BBC TAMIL FM (Asia)
4) NLM TV (Christian Program)
(EURO,MIDDLE EAST,NORTH ASIA GET THE FOLLWING CHANNEL'S LIST )
🌟 EUTELSAT9A@9.0E(KU-BAND)
1.GLOBAL TAMIL VISION TV (United Kingdom)
2.IBC TAMIL TV (United Kingdom)
3.DAN YALL OLI (FRANCE & United Kingdom)
4.ADAVAN TV (United Kingdom)
5.DEEPAM TV (United Kingdom)
6.NLM TV
7.ANGEL TV EUROPE
8.VIJAY TV INTERNATIONL (NO AUDIO)
9.HOLY GOD TV EUROPE
10.RAINBOW TV (United Kingdom)
🌟 HOTBIRID 13B/13C@13.0E (KU-BAND)
1.TRT FM (United Kingdom)
2.IBC TAMIL FM (United Kingdom)
Sunday, 25 February 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_79.html
*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.*
🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,
*🌟 மாவட்டத் தலைவர்:*
தோழர்.து.ஞானசேகரன்
*🌟 மாவட்டச் செயலாளர்:*
தோழர்.க.ஒச்சுக்காளை
*🌟 மாவட்டப் பொருளாளர்:*
தோழர்.சி.பெரியகருப்பன்
*🌟 மாநில செயற்குழு உறுப்பினர்:*
தோழர்.பெ.சீனிவாசன்
*🌟 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*
தோழர்.வே.ஜான்சிராணி
தோழர்.தே.முருகன்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_25.html
*🌟விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை இந்திராகாந்தி நர்சரிப் பள்ளி, செஞ்சியில் நடைபெற்றது.*
🌟 மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் *தோழர்.கு.குணசேகரன்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
🌟 மாநில செயலாளர் *தோழர்.அ.ரஹும்* அவர்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
🌟 மாவட்ட செயலாளர் *தோழர்.இரா.சண்முகசாமி* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
🌟 மாவட்ட பொருளாளர் *தோழர்.தண்டபாணி* அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
🌟 வல்லம் வட்டாரத்தின் சார்பாக கூட்ட செலவினங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு TNPTF விழுப்புரம் மாவட்ட மையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
*கூட்டப்பொருள்:*
⚡1.உறுப்பினர் பட்டியல் இறுதிபடுத்துதல்,
⚡2.டைரி 2018 தொகை செலுத்துதல்,
⚡3.மாநில செயற்குழு முடிவுகள்,
⚡4.பயிற்சி முகாம்,
⚡5.மாநிலத் தலைநகர் மறியல் போராட்ட ஆய்வு.
⚡6.ஆசிரியர் பிரச்சினைகள்,
⚡7.மாவட்ட செயலர் கொணர்வன,
⚡8.இதர செயல்பாடுகள்.
*தீர்மானங்கள்:*
⚡ஜேக்டோ-ஜியோ தொடர் மறியல் போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று (24.02.2018) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் தோழர்.மோசஸ் மீது அடக்குமுறையை ஏவிய காவல்துறையைக் கண்டித்தும் அந்த காவலர் மீது காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
⚡ விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்(TNPTF ) பொருளாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்களின் தந்தையார் மாரடைப்பால் இன்று காலை மரணம் எய்தினார். அன்னாருக்கு விழுப்புரம் மாவட்ட TNPTF சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
⚡புதிய மாவட்ட நிர்வாகிகள் வரும் வாரத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்தல் உள்ளிட்ட தீர்மானம் இயற்றப்பட்டது.
🌟மாவட்ட செயற்குழு கூட்ட நிகழ்வு புகைப்படத் தொகுப்பினை காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்க.
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_25.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚖ *SR Book* - *தகவல் தர* *வேண்டியதில்லை* 📜
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/sr-book.html
*அன்பார்ந்த அரசு ஊழியர்களே. !*
🌟 அரசு ஊழியராக பணிபுரியும் நாம் நம் வேலை தொடர்பான *பணிப்பதிவேடு* *SR Book* நகல் கேட்டு யாரேனும் தகவல் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்தால் தரவேண்டியதில்லை.
🌟அலுவலர்களின் தனிப்பட்ட வேலை தொடர்பான பதிவுகள் அடங்கிய பணிப்பதிவேடு விவரம் (SR Book details) பணியாளருக்கும் வேலை வழங்குபவருக்கும் (Employer) இடையிலுல்ல விடயம். இது பொதுநலன் சார்ந்ததல்ல என்பதால் தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டியதில்லை.
🌟 " மணுதாரர் கோரிய தகவலானது அலுவரின் அந்தரங்க விஜயம் (Personal Information) என்பதால் தகவல் உரிமைச் சட்டம் 2005 விதி 8(1)(j) ன் படியும்
🌟 மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் ( Girish Ramachandra Deshpande vs.GIC Case. CLP(Civil) 27734/2012 dt 03.10.2012 ) பணிப்பதிவேடு நகல் வழங்க இயலாது "என்று தெரிவித்து மணுதாரருக்கு பதில் வழங்கிவிடலாம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*BLO election duty - மன உளச்சலால் அவதிபடும் ஆசிரியர்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blo-election-duty.html
*🌟கள ஆய்வில் ஈடுபடும் பெண் ஆசிரியர்கள் தங்கள் பணி முடித்து செல்ல இரவு ஆகிவிடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிறது.*
*🌟BLO பணி , ஆசிரியர் பணி , வீட்டில் உள்ள பணிகள் இம்மூன்றும் ஒரு சேர இணைந்து ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து அடுத்த நாள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய பாடங்கள் திட்டமிடுதல் பணி பாதிக்கப்படுவதுடன்...*
*🌟கற்றல் இருந்தால் கற்பித்தல் பணி சிறக்கும் என்பார்கள் ..*....
*🌟இங்கு திட்டமிடவே நேரம் இல்லை என்கிற பொழுது ஆசிரியர்களுக்கு புதிய வகைகளை கற்க ஏது நேரம்....*
*🌟13 வகை பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....*
⚡1. சத்துணவு அமைப்பாளர்
⚡2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
⚡3. கிராம நிர்வாக அலுவலர்
⚡4. ஊராட்சி செயலாளர்
⚡5. மின் கணக்கீடு செய்பவர்
⚡6 அஞ்சலக ஊழியர்
⚡7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
⚡8. சுகாதார பணியாளர்கள்
⚡9. மதிய உணவு பணியாளர்
⚡10. மாநாகராட்சி தண்டர்
⚡11. கிராம பணியாளர்கள்
⚡12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
⚡13. ஆசிரியர்கள்
*🌟ஆனால் மேற்கண்ட பட்டியலில் ஆசிரியர்களை மட்டுமே இந்த மாவட்டத்தில் பயன்படுத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்..*..
*🌟தென் மாவட்டங்கள் முழுவதும் கல்வி நலன் பாதிக்கப்படாதவாறு....அம்மாவட்டங்களில் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையினோர்க்கு இப்பணியினை வழங்கி , அம்மாவட்டங்களின் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை காத்துள்ளனர்...*.....
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 24 February 2018
*ஜாக்டோ-ஜியோ -- நேற்றும் இன்றும்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_97.html
🌟 JACTTO-GEO போராட்டத்தில்... என்னை மெய் சிலிர்க்க வைத்த காட்சி இது....
🌟 உண்மையிலேயே இந்த பட்டை நாமம் தரித்தவர் பிணம் போல் காட்சியளித்தவர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்.
🌟 CPS திட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்காக இவர்கள் எடுத்த அவதாரம் இது. ஆனால் CPS திட்டத்தில் உள்ள தோழமைகளே..... இனியாவது உணர்வடையுங்கள்.
🌟 நீங்கள் தற்போது வாங்கும் ஊதியம் மட்டும் போதுமென்று நீங்கள் வாழ்ந்தால்... உங்களைப் போன்ற பித்தன் இத்தரணியில் யாருமில்லை.
*தோழர்களுக்கு போராட்ட வாழ்த்துக்கள்...*
🌟 நான்கு நாட்களாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் மாபெரும் வெற்றி!!!
🌟 நான்காவது நாள் பெண் ஆசிரியர்கள் தோழர்கள் மறியல் ஆர்ப்பாட்டம் வரலாற்று சிறப்புமிக்க எழுச்சிமிகு தருணம்....
🌟 2003 க்கு பிறகு அரசின் கவனத்தை ஈர்த்த ஆகச்சிறந்த அறப்போராட்டம்...
🌟 இப் போராட்டங்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கிய மாநில, மாவட்ட , வட்டார பொறுப்பாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் , மகளிரணி மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது கிளையின் சார்பில் வீரஞ் செறிந்த நன்றிகள்....
*கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!!*
🌟 நான்காம் நாள் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர் மோசஸ் அவர்களிடம் காவல்துறை வன்முறையாக நடந்துகொண்டு தாக்கியுள்ளனர். வன்முறையாக நடந்துகொண்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
🌟 காவல் துறை நண்பர்களே! இப்படி அடி வாங்கி, உதை வாங்கி போராடி நாங்கள் பெற்றுத் தரும் பணபலன்களைத்தான் நீங்களும் வாங்கி அனுபவிக்கிறீர்கள் என்பதை மறவாதீர்.
🌟 தைரியமிருந்தால் நாங்கள் போராடிப்பெற்ற ஊதிய உயர்வு பணபலன்களை வேண்டாமென்று கூறிவிடுங்கள். நாங்கள் போராடிப்பெற்ற ஊதியக்குழு பணபலன்களைத்தான் நீங்களும் வாங்குகிறீர்கள். எனவே நீங்கள் போராடும் ஊழியர்களைத் தாக்கி, உங்கள் உரிமைகளைப் பறித்தவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.
🌟 நாங்கள் போராடிப் பெற்றால்தான் உங்களுக்கும் கிடைக்கும், இல்லை என்றால் உங்களுக்கும் நாமம் தான் என்பதை நினைவில் கொண்டு இனிவரும் காலங்களில் பணியாற்றுங்கள்.
*FLASH NEWS*
*🌟ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு அவசரக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.*
*⚡1) மாரச் 24 மாவட்ட அளவில் பேரணி.*
*⚡2) 08.05.2018 சென்னை கோட்டை முற்றுகை.*
*ஜாக்டோ-ஜியோ*
*ஒன்றுப்பட்டு போராடுவோம்..*
*வெற்றிபெறுவோம்..*
*இறுதி வெற்றி நமதே!*
⚡இவண்,
*_TNPTF அயன்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)