Tuesday, 27 February 2018

*குடும்பக் கட்டுப்பட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_38.html


🌟 அரசு ஊழியர் ஒருவரின் மனைவி குடும்ப நல அறவை சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து, அரசு ஊழியருக்கு மருத்துவச் சான்றின் பேரில் 7 நாள் இவிவிடுப்பு வழங்கப்படும். முதல் அறுவைசிகிச்சை பயன் அளிக்காத போது, மனைவி இரண்டாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டாலும் 7 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம். -(அரசு ஆணை எண் 470, நிர்வாக துறை, நாள்: 14.11.1990).


🌟 சில்லரை செலவின பணியாளருக்கும் இவ்விடுப்பு வழங்கலாம். (அரசாணை எண்-1452, நல்வாழ்வுத்துறை, நாள்:14.07.1982).


🌟 இந்த விடுப்புடன் அரசு விடுமுறை அல்லது பிற விடுப்புகளையும் சேர்த்து எடுக்கலாம். இந்த விடுப்புகளை சாதாரணமாக விடுப்பு வழங்கும் அலுவலரே வழங்கலாம். (அரசு ஆணை எண்- 356, நல்வாழ்வுத்துறை, நாள்:22.02.1982).


🌟 திருமணம் ஆகாத அல்லது இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளவர் Recanalization Operation செய்து கொண்டால், மருத்துவ சான்றின் பேரில் 21 நாட்கள் விடுப்பு வழங்கலாம் (அரசு விடுமுறையும் சேர்த்து), இந்த விடுப்பை பிற விடுப்புகளுடன் சேர்த்தும் எடுக்கலாம். (அரசாணை எண்- 2323, நல்வாழ்வுத்துறை, நாள்: 28.12.1981).

🌟 ஆண் அரசு ஊழியர் குடும்ப நல சிகிச்சை செய்து கொண்டால் 8 நாட்கள் விடுப்பு மட்டுமே வழங்கப்படும். (அடிப்படை விதி இணைப்பு விதியின் (I) ல் உள்ள துணை விதி 7(ஏ) ன் கீழ்).

🌟 பெண் அரசு ஊழியர் Non-Puerperal sterllisation அறுவை சிகிச்சை செய்துகொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்கலாம். பேறு காலத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு கிடையாது. (மேற்படி விதி)

🌟 தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண் -299, நல்வாழ்வுத்துறை, நாள்:10.03.1982).

🌟 சில நேரங்களில் அறுவைசிகிச்சை காரணமாக மேற்படி விடுப்பிற்கும் அதிகமாக சிறப்பு விடுப்பு தேவைப்பட்டால், மருத்துவ அலுவலரின் சான்றின் பேரில் அதிகமான விடுப்பு வழங்கப்படும். (அரசாணை எண்-644, நல்வாழ்வுத்துறை, நாள்- 25.03.1982).

 🌟 சாதாரண விடுப்பு வழங்கும் அலுவலரே இந்த விடுப்பை வழங்கலாம். (அரசாணை எண்- 356, நல்வாழ்வுத்துறை,  நாள்: 22.02.1982).

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: