🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_25.html
*🌟விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை இந்திராகாந்தி நர்சரிப் பள்ளி, செஞ்சியில் நடைபெற்றது.*
🌟 மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் *தோழர்.கு.குணசேகரன்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
🌟 மாநில செயலாளர் *தோழர்.அ.ரஹும்* அவர்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
🌟 மாவட்ட செயலாளர் *தோழர்.இரா.சண்முகசாமி* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
🌟 மாவட்ட பொருளாளர் *தோழர்.தண்டபாணி* அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
🌟 வல்லம் வட்டாரத்தின் சார்பாக கூட்ட செலவினங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு TNPTF விழுப்புரம் மாவட்ட மையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
*கூட்டப்பொருள்:*
⚡1.உறுப்பினர் பட்டியல் இறுதிபடுத்துதல்,
⚡2.டைரி 2018 தொகை செலுத்துதல்,
⚡3.மாநில செயற்குழு முடிவுகள்,
⚡4.பயிற்சி முகாம்,
⚡5.மாநிலத் தலைநகர் மறியல் போராட்ட ஆய்வு.
⚡6.ஆசிரியர் பிரச்சினைகள்,
⚡7.மாவட்ட செயலர் கொணர்வன,
⚡8.இதர செயல்பாடுகள்.
*தீர்மானங்கள்:*
⚡ஜேக்டோ-ஜியோ தொடர் மறியல் போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று (24.02.2018) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் தோழர்.மோசஸ் மீது அடக்குமுறையை ஏவிய காவல்துறையைக் கண்டித்தும் அந்த காவலர் மீது காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
⚡ விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்(TNPTF ) பொருளாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்களின் தந்தையார் மாரடைப்பால் இன்று காலை மரணம் எய்தினார். அன்னாருக்கு விழுப்புரம் மாவட்ட TNPTF சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
⚡புதிய மாவட்ட நிர்வாகிகள் வரும் வாரத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்தல் உள்ளிட்ட தீர்மானம் இயற்றப்பட்டது.
🌟மாவட்ட செயற்குழு கூட்ட நிகழ்வு புகைப்படத் தொகுப்பினை காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்க.
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_25.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment