Saturday, 24 February 2018

*ஜாக்டோ-ஜியோ -- நேற்றும் இன்றும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_97.html


🌟 JACTTO-GEO போராட்டத்தில்... என்னை மெய் சிலிர்க்க வைத்த காட்சி இது....



🌟 உண்மையிலேயே இந்த பட்டை நாமம் தரித்தவர் பிணம் போல் காட்சியளித்தவர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்.


🌟 CPS திட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்காக இவர்கள் எடுத்த அவதாரம் இது. ஆனால் CPS திட்டத்தில் உள்ள தோழமைகளே..... இனியாவது உணர்வடையுங்கள்.


🌟 நீங்கள் தற்போது வாங்கும் ஊதியம் மட்டும் போதுமென்று நீங்கள் வாழ்ந்தால்... உங்களைப் போன்ற பித்தன்  இத்தரணியில் யாருமில்லை.




*தோழர்களுக்கு போராட்ட வாழ்த்துக்கள்...*


🌟 நான்கு நாட்களாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் மாபெரும் வெற்றி!!!



🌟 நான்காவது நாள் பெண் ஆசிரியர்கள் தோழர்கள் மறியல் ஆர்ப்பாட்டம் வரலாற்று சிறப்புமிக்க எழுச்சிமிகு தருணம்....



🌟 2003 க்கு பிறகு அரசின் கவனத்தை ஈர்த்த ஆகச்சிறந்த அறப்போராட்டம்...



🌟 இப் போராட்டங்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கிய மாநில, மாவட்ட , வட்டார பொறுப்பாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் , மகளிரணி மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது கிளையின் சார்பில் வீரஞ் செறிந்த நன்றிகள்....


*கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!!*


🌟 நான்காம் நாள் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்  மோசஸ் அவர்களிடம் காவல்துறை வன்முறையாக நடந்துகொண்டு தாக்கியுள்ளனர். வன்முறையாக நடந்துகொண்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். 


🌟 காவல் துறை நண்பர்களே! இப்படி அடி வாங்கி, உதை வாங்கி போராடி நாங்கள் பெற்றுத் தரும் பணபலன்களைத்தான் நீங்களும் வாங்கி அனுபவிக்கிறீர்கள் என்பதை மறவாதீர். 


🌟 தைரியமிருந்தால் நாங்கள் போராடிப்பெற்ற ஊதிய உயர்வு பணபலன்களை வேண்டாமென்று கூறிவிடுங்கள். நாங்கள் போராடிப்பெற்ற ஊதியக்குழு பணபலன்களைத்தான் நீங்களும் வாங்குகிறீர்கள். எனவே நீங்கள் போராடும் ஊழியர்களைத் தாக்கி, உங்கள் உரிமைகளைப் பறித்தவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதை கடுமையாக கண்டிக்கிறோம். 


🌟 நாங்கள் போராடிப் பெற்றால்தான் உங்களுக்கும் கிடைக்கும், இல்லை என்றால் உங்களுக்கும் நாமம் தான் என்பதை நினைவில் கொண்டு இனிவரும் காலங்களில்  பணியாற்றுங்கள்.




*FLASH NEWS*


*🌟ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு அவசரக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.*


*⚡1) மாரச் 24 மாவட்ட அளவில் பேரணி.*   


*⚡2) 08.05.2018   சென்னை கோட்டை முற்றுகை.*


*ஜாக்டோ-ஜியோ*




*ஒன்றுப்பட்டு போராடுவோம்..*

*வெற்றிபெறுவோம்..*

*இறுதி வெற்றி நமதே!*



இவண்,

*_TNPTF அயன்_*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: