Thursday, 15 February 2018

*அரசுப் பணியாளர்கள் நிழற்பட அடையாள அட்டை - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_15.html


*🌟அனைத்து அரசுப் பணியாளர்களும் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை அணிய வேண்டும் என்று அரசு தலைமைச் செயலாளர் திருமதி.லஷ்மி ப்ராணேஷ், இ.ஆ.ப அவர்களின் ஆணை*



🌟அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் தவறாமல் அவர்களது நிழற்பட அடையாள அட்டை அணிதல் வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.



🌟அன்றாட நிர்வாகத்தில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஆட்சி மொழித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும்,அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அணிந்துகொள்ள வேண்டிய அடையாள அட்டை தமிழில் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும் என தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் அமைந்த அடையாள அட்டைகளை அணியும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.



🌟ஆனால் தமிழில் மட்டும் அடையாள அட்டை அணிந்தால் பொருத்தமாகாது, ஏனெனில் தமிழ் அறியாத பிறமொழி இனத்தவர்களுக்கு ஆங்கிலத்தில் அடையாள அட்டை இருந்தால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.



🌟 அடையாள அட்டையில் பெயர், பதவி மட்டுமாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் எனவே இவ்வாறு அமையப்பெற்ற அடையாள அட்டையினை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: