🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/75-sbi.html
🌟இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), குறைந் தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்களுக்கான அபராதத்தொகையை 75% குறைத்துள்ளது.
🌟எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🌟அதன்படி, மாநகரங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 3,000 ரூபாயும், சிறு நகரங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 2,000 ரூபாயும், கிராமங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும்.
🌟இத்தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.50 முதல் குறைந்தபட்சமாக ரூ.25 வரை அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
🌟இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
🌟அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.
🌟ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment