🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_18.html
*🌟பேரண்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*
*🌟17.03.2018 சனிக்கிழமை அன்று மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாநில அலுவலகக் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்றது.*
*🌟இந்த செயற்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் முதல் செயற்குழு கூட்டம், இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர்.மணிமேகலை தலைமை வகித்தார்.*
*⚡தீர்மானங்கள்:*
*🌟உலகப் பகழ்பெற்ற இயற்பியலாளரும், வானவியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கின்ஸ், தேனி மாவட்ட முன்னாள் தலைவர் போடி.பொன்னையா அவர்களின் துணைவியார் திருமதி.சென்பகவள்ளி அம்மையார், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆசிரியர் திருமதி.உஷா, சிரியா போரில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள், குரங்கணி மலையேற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட காட்டு தீ விபந்தில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இம்மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*🌟நமது இயக்கத்தின் 12 வது மாநில அமைப்புத் தேர்தலை 04.03.2018 அன்று மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டக்கிளைக்கு இம்மாநில செயற்குழு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.*
*🌟நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற 21.02.2018 முதல் 24.02.2018 நான்கு நாட்கள் சென்னையில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தில் வீறுகொண்டெழுந்து நின்ற நமது இயக்க தோழர்களுக்கு இம்மாநில செயற்குழு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.*
*🌟24.03.2018 அன்று ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெற இருக்கும் மாவட்ட தலைநகர் பேரணியில் நமது இயக்க தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள மாவட்ட, வட்டார கிளை பொறுப்பாளர்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றும் இம்மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*🌟ஜாக்டோ ஜியோவின் மார்ச் 24 மாவட்ட பேரணி, மே 8 கோட்டை முற்றுகை ஆகிய போராட்டங்களை தொய்வின்றி வலிமையுடன் நடத்திடவும், ஜாக்டோ ஜியோவின் ஒற்றுமை கருதியும் மார்ச் 25 ல் நமது இயக்கத்தின் சார்பில் ஒற்றைக் கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மே 8 க்கு பிறகு இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடருமேயானால் எதிர் கட்சி தலைவர்களை அழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எனவும், மே 8 க்கு பிறகு நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் இம் மாநாட்டு தேதியினை குறிப்பிடுவது என தீர்மானம் இயற்றப்பட்டது.*
*🌟04.05.2018 முதல் 06.05.2018 வரை 3 நாட்கள் ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற உள்ள STFI மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 40 நிர்வாகிகளும், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தர், முன்னாள் மாநில பொருளாளர் தோழர் ஜுவானந்தம், பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் இருவர் மற்றும் வேலூர் மாவட்ட கிளையிலிருந்து ஒருவர் உட்பட ஐந்து பேர் பார்வையாளர்களாகவும் கலந்து கொள்வது எனவும் இம் மாநில செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.*
*🌟அகில இந்திய பெண் ஆசிரியர் கள் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாட்டினை தமிழ்நாட்டில் நடத்த STFI கூட்டமைப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதை TNPTF வரவேற்பதோடு, அம் மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திட தமிழகத்தில் STFI ல் இணைந்துள்ள பிற சங்கங்களுடன் இணைந்து களப்பணிகளில் ஈடுபட இம்மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*🌟மகளிர் செயற்குழு உறுப்பினர்கள்:*
*தெற்கு மண்டலம் - திருமதி.B.கோமதி (கன்னியாகுமரி மாவட்டம்),*
*தென் மத்திய மண்டலம் - திருமதி.ஜெயகோபிகா (கள்ளர்பள்ளி கிளை),*
*கிழக்கு மண்டலம் - திருமதி.இரா.புவனேஸ்வரி (திருவாரூர் மாவட்டம்).*
*இவர்களை நமது அமைப்பு விதிகளின் படி இம் மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
மேலும்,
*மேற்கு மண்டலம் - நாமக்கல் மாவட்டம்*
*கிழக்கு மண்டலம் - புதுக்கோட்டை மாவட்டம்*
*வடக்கு மண்டலம் - வேலூர் மாவட்டம்*
*இம்மூன்று மண்டலங்களுக்கு மகளிர் செயற்குழு உறுப்பினர்களை அம் மாவட்ட அமைப்பு முடிவு செய்து கொடுக்கும் நபரின் பெயரை இணைத்து கொள்வது எனவும் இம்மாநில செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*🌟மாநிலத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமான வேலூர் மாவட்ட கிளைக்கு இயக்க அமைப்பு விதியின் படி கூடுதல் மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்ள அனுமதித்து இம்மாநில செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*🌟ஆரம்பக்கல்வி வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையிலும், கிராமப்புற ஏழை எளிய குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும் 20 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளியை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் முடிவினைக் கைவிட தமிழக கல்வித்துறையை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*🌟தொடக்கக்கல்வி துறையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு 19.03.2018 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக முதல் நாள் அறிவிக்கப்பட்டு மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிப்பதோடு 31.03.2018 க்குள் மேற்கண்ட கலந்தாய்வினை நடத்திட தொடக்கக்கல்வி இயக்குநரை இம் மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*🌟மாநில நிர்வாகிகளுக்கான வேலைப்பகிர்வு உள்ளிட்ட இன்னும் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது.*
*⚡தோழமையுடன்;*
*_தோழர்.மயில்,_*
*_மாநில பொதுச்செயலாளர்,_*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment