Wednesday, 28 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் செய்தி அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_28.html



*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.*


*🌟தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட பதவி உயர்வுக் கலந்தாய்வை 31.03.2018 க்குள் நடத்தக்கோரி 27.03.2018 அன்று அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில மையம் விடுத்த அழைப்பை ஏற்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பேரெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நமது பேரியக்கத்தின் அனைத்துத் தோழர்களுக்கும் மாநில மையத்தின்  புரட்சிகரமான வாழ்த்துக்கள்*


*🌟ஆசிரியர்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஈட்டிமுனையாக இருந்து போராடக்கூடிய நம் பேரியக்கம் கள்ளர் பள்ளிக்கிளையின் மாவட்டச்செயலாளர் திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நாளை (29.03.2018) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை  காளவாசலில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்துகிறது*


*🌟போராட்ட ஏற்பாடுகளிலும் களப்பணிகளிலும் நம் இயக்கத் தோழர்கள் நம் இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடு இமைப்பொழுதும் சோராமல் களப்பணி ஆற்றி வருகிறார்கள்*


*🌟தென்மத்திய மண்டல அளவில் நடைபெறும் இப்போராட்டத்தில் பங்கேற்க அம்மண்டலத்தில் உள்ள மதுரை,தேனி,திண்டுக்கல்,சிவகங்கை,இரா மநாதபுரம்,கள்ளர்பள்ளி மாவட்டக்கிளைகளின் நம் பேரியக்கத் தோழர்கள் போராட்டக்களம் நோக்கி புறப்பட ஆயத்தமாகி விட்டனர்*


*🌟சக தோழனுக்கு ஏற்பட்ட அநீதியை தனக்கு ஏற்பட்ட அநீதியாகக் கருதும் நம் பேரியக்கத் தோழர்களே !தென்மத்திய மண்டலம் தாண்டி பிற மாவட்டத் தோழர்களும் வாய்ப்பிருப்பின் இந்த அறப்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாநில மையம் அழைக்கிறது*


*"பொறுமை ஒருநாள் புலியாகும்; அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும்"*


*நாளை காளவாசல் நிறையட்டும்; அதிகார வர்க்கம் உறையட்டும்; அநீதி மறையட்டும்*


*⚡தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: