*சென்னையில் விற்கப்படும் ரசாயண வாழைப்பழங்கள்..! புற்று நோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_4.html
*🌟சென்னை கோயம்பேட்டில், ரசாயண கலவையை பயன்படுத்தி வாழைப்பழங்களை பழுக்கவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. புற்று நோயை உண்டாக்கும் ரசாயண வாழைப்பழத்தின் விபரீத பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.*
*🌟உடலுக்கு தேவையான 16 வகையான அத்தியாவசிய சத்து மிக்கது வாழைப்பழம்..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பழவகையை சார்ந்தது..!*
*🌟சென்னையை பொறுத்தமட்டில் அதிகப்பட்டியான வாழைப்பழங்கள் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து லாரிகள் மூலம் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றது. இங்குள்ள வாழைத்தார் மண்டிகளில் விற்பனைக்காக இறக்கப்படும் அனைத்து வாழைத்தார்களிலும் முழுமையாக ரசாயண கலவை ஊற்றப்பட்டு பழுக்கவைத்து உடனடியாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.*
*🌟இவர்கள் ஏதோ தண்ணீர் ஊற்றி வாழைத்தாரை கழுவி சுத்தம் செய்கின்றனர் என்று நினைத்து விடாதீர்கள் அத்தனையும் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயண கலவை..!*
*🌟ப்ரொபலைன்(propylene) என்ற ரசாயணத்தை நீரில் கலந்து அந்த தண்ணீரை தான் கழுவுவது போல வாழைத்தார்கள் மேல் ஊற்றுகின்றனர் வாழை மண்டி ஊழியர்கள்..! அடுத்து அந்த வாழைத்தார்களில் இருந்து தண்டை வெட்டிவிட்டு பழத்தை மட்டும் தனி கூறாக அங்கு குவித்து வைக்கின்றனர். பச்சையாக காட்சி அளித்த வாழைக்காய், ரசாயண கலவையின் வீரியத்தால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மஞ்சள் வண்ண பழமாக மாறிவிடுகின்றது. அதோடு 5 நாட்கள் வரை மஞ்சள் வண்ண பழமாகவே காட்சி அளிக்கும் என்றும் அதனாலேயே வாழைக்காய் மீது ரசாயண கலவை ஊற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது.*
*🌟அத்தகைய பழங்களைதான் கோயம்பேடு சந்தையில் இருந்து வாங்கி வந்து பழக்கடைகளிலும் , பழமுதிர் நிலையங்களிலும், சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருக்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது. இத்தகைய ரசாயண வாழைப்பழத்தை சாபிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும், இத்தகைய ரசாயண வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.*
*🌟மலச்சிக்கல் நீக்கும் அருமருந்தாகவும், மலட்டுத்தன்மை போக்கும் மாமருந்தாகவும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வாழைப்பழத்தில் உயிருக்கும், உடலுக்கும் ஊறுவிளைவிக்கும் ரசாயண கலவையை ஊற்றி பழுக்கவைத்து விற்பனை செய்து வருகின்றனர் சென்னை கோயம்பேட்டில் உள்ள சில பேராசை பிடித்த மொத்த வியாபாரிகள் என்பதே கசப்பான உண்மை..! இந்த விவரம் தெரிந்தே சில்லரை வியாபாரிகளும் ரசாயண வாழைப்பழத்தை மக்களிடம் கொண்டு போய் விற்கின்றனர் என்பதற்கு இந்த வியாபாரியின் நமட்டுச்சிரிப்பே சாட்சி..!*
*🌟இந்த விபரீத செயலில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயண வாழைப்பழ விற்பனையை தடுக்க தீவிர தொடர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment