🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_13.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் தோழர். சோ.முருகேசன், மாவட்ட செயலாளர் தோழர். செ.பால்ராஜ், மாவட்ட தலைவர் தோழர். பி.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் தோழர். ஞா.பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். மு.பிரம்ம நாயகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது...,*
*🌟தமிழகத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் அரசு பள்ளிகள் 529 ம், மாநகராட்சி பள்ளிகள் 436 ம், நகராட்சி பள்ளிகள் 839 ம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 28042 என மொத்தம் 29846 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இது தவிர அரசு உதவிபெறும் பள்ளிகள் 6589, நலத்துறைப் பள்ளிகள் 1471, நர்சரி பிரைமரி பள்ளிகள் 6308 என மொத்தம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 44214 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.*
*🌟நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 34 ம், நகராட்சி பள்ளிகள் 23 ம், மாநகராட்சி பள்ளிகள் 26 ம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 663 ம்என மொத்தம் 746 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.*
*🌟இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் கோடை விடுமுறையில் நடைபெறும். கலந்தாய்வில் பங்குபெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் அனைத்து வட்டார உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தால் பெறப்பட்டு முறையாக A,B,C என பதிவேடுகள் பதிவு செய்து பிரிக்கப்பட்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலும், மே மாத இறுதிவரை ஏற்படும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும்.*
*🌟கடந்த ஆண்டு அரசாணை எண் 256 பள்ளிக் கல்வித்துறை நாள் 19.04.2017 அன்று ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை சுற்றறிக்கை வெளியிட்டார்.*
*🌟சென்ற ஆண்டு விடுமுறை நாட்களில் கலந்தாய்வு நடைபெற்றதால் ஆசிரியர்கள் இடம்பெயர ஏதுவாகவும், மாணவர் கல்வி நலன் பாதிக்காமலும் பள்ளி திறக்கும் முதல் நாள் கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் புதிய இடத்தில் பணியேற்றனர்.*
*🌟ஆனால் இந்த ஆண்டு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுவது பற்றியோ, கலந்தாய்வு பற்றியோ எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஏப்ரல் 19 ம் தேதியுடன் பள்ளி நிறைவடைகிறது, பின் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குவது குறித்து முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் கலந்தாய்வு பற்றி தற்போது வரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.*
*🌟பள்ளி இறுதி வேலை நாளுக்கு முன்பாக கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும், ஆசிரியர்களிடமிருந்து இந்த மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் பெற வழிவகை செய்ய வேண்டும், காலி பணியிட விபரங்களை ஒளிவு மறைவின்றி இணையத்தில் வெளியிடப்பட வேண்டும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வினை உடனடியாக நடத்திட வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தோழமையுடன்;
*தோழர்.செ.பால்ராஜ்,*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*திருநெல்வேலி மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment