Wednesday, 11 April 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_14.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி கிளையின் பொறுப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காகப் பழிவாங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் திரு.ப.வாஞ்சிநாதன் அவர்களுக்கு பணியாற்றிய பள்ளியிலேயே மீண்டும் பணி வழங்கக் கோரியும், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் அராஜக அதிகாரி இணை இயக்குநர் திரு.பொன் குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.*


*⚡நாள்:*

25.04.2018 புதன்கிழமை காலை 10.00 மணி முதல்,



*⚡இடம்:* 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயக்குநரகம் முன்பு, எழிலகம், சென்னை.



*🌟காத்திருப்பு போராட்ட கோரிக்கைகள்:*

⚡பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம், போடி  - கிழக்கு அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி கிளையின் மாவட்ட செயலாளர் திரு.ப.வாஞ்சிநாதன் அவர்களுக்கு பணியாற்றிய அதே பள்ளியில் பணி நியமன ஆணை வழங்கிடு.


⚡தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வரும் கள்ளர் சீரமைப்புத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் திரு.பொன்குமார் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்தி பணி நீக்கம் செய்.




*⚡ஆசிரியப் பேரினமே! அலைகடலென அணிதிரள்வீர்!!*


*⚡"தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்."*

*⚡"நெஞ்சினைப் பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம், நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்."*


*இவண்;*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*மாநில அமைப்பு.*


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

TNPTF மாநில அமைப்பிற்கு பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்வதோடு, காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: