Sunday, 8 April 2018

*தங்கம் வென்ற தமிழருக்கு குவியும் பாராட்டுகள்!*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_39.html


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதிஷ்குமாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையையும் அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சதீஷுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.



பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பளுதூக்கும் வீரர்கள் இந்தியாவின் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் தரத்தையும் தூக்கி உயர்த்துகின்றனர். தங்கம் வென்ற சதிஷ்குமாருக்கு எனது பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "காமன்வெல்த் போட்டியில் கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் செயல்பாடு அபரிவிதமாக இருக்கிறது. தங்கம் வென்ற சதிஸ் சிவலிங்கத்துக்கு என் இதயங்கனிந்த பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.



தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் சதீஷ்குமார் பெருமை சேர்த்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



"இரண்டாவது முறையாகத் தங்கம் வென்ற வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். அவர் போட்டியில் தங்கம் வென்றதற்குப் பின்னர் ஆதரவு தெரிவிக்காமல், போட்டிக்கு முன்னரே மாநில அரசு தனது முழு ஆதரவையும் அவருக்கு தெரிவித்துள்ளது. தொடர் வெற்றிகளுக்கு



அனைத்து உதவிகள் நமது வீரர்களுக்குத் தேவைப்படுகிறது" என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "காமன் வெல்த் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், "காயம் இருந்தும் நாட்டிற்காகத் தங்கம் வென்றுள்ளது அவர் தைரியத்தை பிரதிபலிக்கிறது" என்று பதிவு செய்துள்ளார். இந்தப் போட்டியின் போது அவருக்குத் தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வி.வி.எஸ்.லக்ஷ்மன், விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் சதீஷ்குமாருக்கு தங்களை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*தங்கம் வென்ற தங்கத் தமிழருக்கு _TNPTF அயன்_ சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*

👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: