🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/3000.html
*🌟கோடை விடுமுறையை கழிக்க சென்றுள்ள மாணவ மாணவிகள் மீண்டும் கல்விச்சாலைக்கு வரும்போது அந்த பள்ளி திறந்திருக்குமா? என்பது பில்லியன் டாலர் கேள்வி. காரணம், வரும் கல்வியாண்டில் 3400 தொடக்கப் பள்ளிகளை மூட அரசு யோசித்து வருவதுதான். இதனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உற்சாகத்திலும், ஏழைப் பெற்றோர்கள் கலக்கத்திலும் உள்ளனர்.*
🌟தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின் காமராஜர் கண்ட கனவை நிர்மூலமாக்கி வருகிறதோ, திராவிடக் கட்சிகள் என்ற எண்ணம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்து கொதிக்க வைத்திருக்கிறது.
🌟இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். மயில் கூறுகையில், தமிழகத்தில் 35 தொடக்கப்பள்ளிகள், 9500 நடுநிலைப் பள்ளிகள், 5800 உயர்நிலைப் பள்ளிகள், 7300 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. சுமார் 216870 ஆசிரியர் ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். 7 வது ஊதிய கமிஷன் அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழுவை அமைத்தது. அக்குழு மாவட்ட வாரியாக சென்று தேவையற்ற இடங்களை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து வருகிறது.
🌟அதன் அடிப்படையில் 10 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் தொடக்கப்பள்ளிகளை பக்கத்து கிராம பள்ளிகளுடன் இணைக்கலாம் என உத்தரவிட்டிருக்கிறது. இதனால் வரும் கல்வியாண்டில் சுமார் 3400 தொடக்கப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தப்படும் என தெரிகிறது. பள்ளிகளை மூடினால் மக்கள் பிரச்சனை செய்வார்கள் என்பதால் அப்பள்ளி கட்டிடங்களில் நூலகம் செயல்படும் என கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
🌟தென் மாவட்டங்களில் மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 7000 ஆசிரியர்கள் வட மாவட்டங்களுக்கு மாற்றப் போவதாகவும் சொல்கிறார்கள். வட மாவட்டங்களில் அவ்வளவு பணியிடங்கள் காலியில்லை. உபரி ஆசிரியர்களை என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை என்றவரிடம் "மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு ஆசிரியர்கள் செயல்பாடும் ஒரு காரணம்தானே" என்று கேட்டோம்.
🌟பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகம் தான், அரசு திட்டமிட்டு தமிழ்வழிக் கல்வியை அழிக்க முக்கிய காரணம். காமராஜர் காலத்தில் வெறும் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. இன்று 28 ஆயிரமாக உயர்ந்து விட்டது. புதிதாக அரசுப்பள்ளிகள் தொடங்க வேண்டுமானால் ஆயிரத்தெட்டு விதிமுறைகள் சொல்கிறார்கள் 8 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பள்ளிகள் இருக்கக்கூடாது என்று கூறும் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஏன் அந்த கட்டுப்பாடு விதிப்பதில்லை. இதற்கு சிறு உதாரணம் நெல்லை மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி அரசு பள்ளிகளுக்கு அடுத்த கட்டடத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
🌟தனியார் பள்ளியில் சேரும் 25% ஏழை மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தை செலுத்துகிறது. அந்த பணத்தை அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தலாமே? கேரளாவில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒன்றரை லட்சம் தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகளாக ஆக்கியிருக்கிறார்கள் ஆனால் தமிழக அரசோ அரசுப் பள்ளிகளையே மூடச் சொல்கிறது. இன்னும் 10, 15 ஆண்டுகளில் தமிழ்வழி தொடக்கக் கல்வியே தமிழகத்தில் இல்லாத நிலை வரும் என எச்சரித்தார்.
🌟இது குறித்து கல்வியாளர்கள் சிலரிடம் கேட்டோம் 7 வது சம்பள கமிஷன் படி ஆசிரியர்களுக்கு தாறுமாறான சம்பளம் வழங்கப்படுகிறது. வாங்கும் சம்பளத்திற்கு ஈடுபாட்டுடன் வேலை செய்வதில்லை, தவிர மாணவர் சேர்க்கையிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கோடை விடுமுறையில் கிராமம் கிராமமாக சென்று மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்துங்கள் என்றால் அதைச் செய்ய மறுக்கிறார்கள்.
🌟அதிலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கொண்டாட்டம் சில பள்ளிகளில் 10 ஆசிரியருக்கு 20 அல்லது 30 மாணவர்கள் தான் இருப்பார்கள் ஆனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரைக் கவனித்தால் போதும் 30 மாணவர்களை 300 மாணவர்கள் என்று எழுதி வைத்துவிட்டு அவர் ஓகே சொல்லும் போலி மாணவர்கள் தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி கோடீஸ்வரரான உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் இருக்கிறார்கள்.
🌟எனவேதான் கடந்த ஆண்டு இறுதியில் ஒவ்வொரு மாணவரின் ஆதார் அட்டையைக் கேட்டு வாங்கிப் பார்த்த போது பள்ளியின் உண்மை நிலை தெரிந்தது. இதனைத் தொடர்ந்தே மாணவர்கள் இல்லாத பள்ளிகளைப் பக்கத்து பள்ளிகளுடன் இணைக்கிறோம். அதில் பணியாற்றிய ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றுகிறோம் என்றார்.
*தோழர்.ச.மயில்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment