🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_93.html
📲வகுப்பறையில் ஆசிரியர்கள் கைபேசியை பயன்படுத்தக்கூடாது என்றுமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
📲விழுப்புர மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 133 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது.
📲மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூட்டத்திற்கு தலைமை தாங்கி, தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
📲அப்போது அவர் கூறுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய, அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும்.
📲பள்ளி வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். மாணவர், மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
📲பள்ளிகளின் சுற்றுச்சுவர்களில் இருக்கும் கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகளை அகற்றிவிட்டு திருக்குறள் மற்றும் அரசின் இலவச திட்டங்கள் பற்றிய வாசகங்கள் இடம் பெற செய்ய வேண்டும்.
📲மாதந்தோறும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்தி, பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பெற்றோர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
📲6 ஆம் வகுப்பு முதல் 9ஆம்வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்து மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று வருகிற 14ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும்.
📲மேலும் மாணவர்கள், பள்ளிக்கு வரும்போது கைபேசிகளைகொண்டு வரக்கூடாது, அதேபோல் மாணவிகள் நகை உள்ளிட்ட அணிகலன்களை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது.
📲எக்காரணத்தை கொண்டும் வகுப்பறையில் ஆசிரியர்கள்கைபேசிகளை பயன்படுத்தக்கூடாது. இதை ஒவ்வொரு தலைமை ஆசிரியர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment