Tuesday 26 June 2018

*புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/06/3.html


*🌟நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*


*🌟மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.*


*🌟ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.*


*🌟இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.*


*🌟இதனால் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.*


*🌟இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*


*🌟இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.*


*🌟அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: