🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_11.html
*சுற்றறிக்கை - 6, நாள்: 10.06.2018*
*🙏பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துகள்! வணக்கங்கள்!*
*🌟தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோவின் போராட்டக்களம் கனன்று கொண்டிருக்கிறது. நம் பேரியக்கத் தோழர்கள் தங்களுக்கே உரிய இயல்பான போர்குணத்தோடு போராட்டகளத்தில் சுற்றிச்சுழன்று பணியாற்றிகொண்டிருக்கிறார்கள். தனிச்சங்க போராட்டமாக இருந்தாலும் கூட்டு போராட்டமாக இருந்தாலும் போராட்டகளத்தை தன்வசப்படுத்துகிற களநுணுக்கம் அறிந்த நம் பேரியக்கத் தோழர்கள் நம் பலத்தை களத்திலே காட்டுகிற உறுதியோடு மாநிலம் முழுவதும் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*
*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல்,*
*⚡CPS திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளுக்காக,*
*🌟ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்களும், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி 11.06.2018 காலை 10.00 மணிக்கு சென்னையில் துவங்குகிறது. காவல்துறையின் கணக்கற்ற தடைகளை உடைத்தெறிந்து சென்னை சேப்பாக்க எழிலக வளாகத்திற்குள் அறப்போராட்டம் தொடங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்குரிய பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.*
*🌟வங்கக்கடலுக்கு எதிரே கடலின் ஆர்பரிப்பை முறியடிக்கும் வகையில் உணர்ச்சிப்பழம்பாக நம் போராட்டம் நடைபெற உள்ளது. ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதுமிருந்து போராட்டகளம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நடைபெறுகிற காலவரைபற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தின் வீச்சு மாநிலம் முழுவதும் 11.06.2018 முதல் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள மாலை நேர ஆர்பாட்டங்களில் எதிரொலிக்க வேண்டும். எத்தனை நாள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அதில் நம் பேரியக்கத் தோழர்களின் பங்கேற்பு தனித்தன்மையுடன் போராட்டகளத்தில் வெளிப்பட வேண்டும்.*
*🌟தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் தன்னகத்தே கொண்ட 114சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற இந்த அறப்போராட்டம் நிச்சயமாக தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறப்போராட்டம். தங்கள் இயக்க உறுப்பினர்களை மட்டும் களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்காமல் தலைவர்களே களத்தில் நின்று போராடுகின்ற மகத்தான போராட்டம்.*
*🌟ஜனநாயக ரீதியிலான எத்தகைய போராட்டங்களையும் சமூகவிரோதிகளின் போராட்டமாக சித்தரிக்கும் தமிழக அரசுக்கு இந்த அறப்போராட்டம் ஒரு புதிய பாடத்தைக் கற்பிக்கும். அன்று மகாத்மாவின் உண்ணாநிலை போராட்டத்தைக் கண்டு வெள்ளைய ஏகாதிபத்தியமே அஞ்சியது. ஆயுதப் போராட்டங்களைக் கூட ஒடுக்கிய ஆங்கிலேய அரசால் மகாத்மாவின் அறப்போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.*
*🌟ஆனால் இன்று ஆங்கிலேயர்களை மிஞ்சிய அகம்பாவ மனநிலையோடு, முதலாளித்துவ சிந்தனையின் முழு வடிவமாய் விளங்கிக்கொண்டிருக்கும் தமிழக அரசு இந்த போராட்டத்தை கையாளும் விதம்தான் ஜாக்டோ ஜியோவின் அடுத்தக்கட்ட போராட்ட வடிவத்தைத் தீர்மானிக்கும்.*
*🌟இதற்கு முன்பும் ஜாக்டோ ஜியோ பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. அப்போராட்டங்களால் கிடைத்த பலன்களும் உண்டு, இன்றளவும் நிறைவேறாத வாழ்வாதார கோரிக்கைகளும் உண்டு. அதற்காகவே இப்போராட்டம், களப்போராட்டத்தில் இலக்கை நோக்கிய பயணம் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு களப்போராட்டமும் இலக்கை நோக்கிய தூரத்தை எளிதாக்கிக் கொண்டே வருகிறது என்பதை தோழர்கள் உணர்ந்து கண் துஞ்சாது பணியாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*_"நம் பாதை தெளிவானது_*
*_நம் பயணம் நீளமானது_*
*_கள நீளத்தைத் தீர்மாணிப்பது அரசல்ல_*
*_நம் போராட்ட வலிமையே"_*
*✍️தோழமையுடன்;*
*_தோழர்.ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment