Friday, 15 June 2018

*வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம் 'வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_15.html


*🌟தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.*


*🌟இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள்மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.*


*🌟சில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனர்.*


*🌟இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.*


*🌟இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவைஇணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.*


*🌟இந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம்.*


*🌟இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: