🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_3.html
*🌟பள்ளிக் கல்வித்துறையில் மாணவர் நலன் பேணும் பொருட்டு, நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக மேம்பட்ட மற்றும் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளைக் கொண்டுவர ஏதுவாக, தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைத் தவிர்த்து பல்வேறு அலுவலகங்களில்,*
⚡முதன்மைக் கல்வி அலுவலகங்கள்,
⚡மாவட்டக் கல்வி அலுவலகங்கள்,
⚡வட்டார அலுவலகங்கள்,
⚡தணிக்கை அலுவலகங்கள்,
⚡மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள்
*🌟04.06.2018 நிலவரப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும்,*
*⚡நேர்முக உதவியாளர்,*
*⚡பள்ளித் துணை ஆய்வாளர்,*
*⚡கண்காணிப்பாளர்,*
*⚡இருக்கைப்பணி கண்காணிப்பாளர்,*
*⚡உதவியாளர்,*
*⚡இளநிலை உதவியாளர்,*
*🌟ஆகியோர் விவரங்களை அலுவலகம் வாரியாக தொகுத்து கையொப்பமிட்டு மின்னஞ்சலில் (jdpsed@nic.in) 04.06.2018 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.*
*🌟தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் எவரது பெயரும் விடுபடவில்லை என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்வதோடு மாவட்டத்தில் உள்ள (பள்ளிகள் நீங்கலாக) எல்லா அலுவலகங்களிலிருந்தும் விவரங்கள் பெற்று அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment