Saturday 23 June 2018

*சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_65.html




*🌟டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.*

       

*🌟சமூக வலைத்தளங்கள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனால், இதனை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.*

*🌟அதன் படி,  வருடத்தின் 365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இயங்கும் 'சமூக ஊடக கண்காணிப்பு கேந்திரத்தை' உருவாக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது,* 

*🌟இதன் படி, டெல்லியில் 20 பேரை கொண்ட, தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.* 

*🌟இந்தியாவில் உள்ள 716 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு ஆப்ரேட்டர் என்ற விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.*

*🌟இந்த உறுப்பினர்கள், ஒரு பகுதியில் மிக அதிகம் பேசப்படும் விவகாரம் குறித்த , தகவல்களையும் அதன் தாக்கங்களையும் சேகரித்து, அறிக்கைகளாக்க திட்டமிட்டுள்ளது.*

*🌟சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால், அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள்.*

*🌟பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.*

*🌟இதன் படி, வாட்ஸப் மூலம் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: