Monday 23 July 2018

*தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு- வீடுகளுக்கு 50 சதவீதம் அதிகரிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/100-50.html


*🌟தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.*


*🌟இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.*


*🌟அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.*


*🌟ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.*


*🌟இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.*


*🌟குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.*


*🌟தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.*


*🌟தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.*


*🌟சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.*


*🌟வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: