🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/tnptf-stfi.html
*_கன்னியாகுமரியில் செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான பெண் ஆசிரியர்கள் மாநாடு நடத்தப்படும் என அகில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது._*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய செயற்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள பாரத சாரண, சாரணிய தேசிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (29.07.2018) நடைபெற்றது.*
*⚡கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் _தோழர்.அபித் முகர்ஜி_ தலைமை தாங்கினார்.*
*⚡பொதுச்செயலாளர் _தோழர்.சந்திர நவ்தீப் பாரதி_ மற்றும் துணைத்தலைவர் _தோழர். இராஜேந்திரன்_ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.*
*🌟இதில் தமிழகத்தில் இருந்து அமைப்பாளர் தோழர். ச.மயில் அவர்கள் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜனார்த்தனன், நிர்வாகிகள் தோழர்.மாயவன், தோழர்.சுரேஷ், தோழர்.சங்கர், தோழர்.ரைமண்ட், தோழர்.உதயசூரியன், தோழர்.ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் பலர் பங்கேற்றனர்.*
*🌟பெண் ஆசிரியர்கள் தேசிய மாநாட்டை கன்னியாகுமரியில் வருகின்ற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மற்றும் 9 ம் தேதிகளில் நடத்துவது என்றும், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 12 ம் தேதி கன்னியாகுமரியில் மாநாடு தயாரிப்புக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.*
*_கூட்டத் தீர்மானங்கள்:_*
*⚡பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உரிமை கோருவதற்காக, தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றம் சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாட்டை கன்னியாகுமரியில் நடந்த வேண்டும் என்றும்,*
*⚡இந்திய மொத்த வருவாயில் 6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.*
*⚡தனிநபர் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.*
*⚡சம வேலை, சம ஊதியம் என்ற தீர்ப்பின் படி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.*
*⚡8 ம் வகுப்பு வரை தேர்ச்சி திட்டத்தை திரும்பப் பெறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.*
*🌟29/07/2018 ல் தில்லியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக அகில இந்திய செயற்குழுவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் உரை ஆற்றினார்.*
*🌟தோழர் ச.மயில் ஆற்றிய உரை நமது ஃTNPTF அயன் YouTube channel ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்க தோழர்களே.*
https://youtu.be/8j9QayM2M14
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment