*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 35 வது இயக்க நாள் விழா கொண்டாடுவது குறித்து மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/35.html
*சுற்றறிக்கை எண் : 7 நாள் : 01.08.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்!_*
*⭐ஆகஸ்டு-2 தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். தமிழ்நாட்டு ஆசிரியர்களைப் பாதுகாக்கிற கவசமாகவும், கேடயமாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கம் தோன்றிய நாள்.*
*⭐தற்போது தமிழ்நாட்டு ஆசிரியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கம் உதயமான உன்னதமான நாள்.*
*⭐நாளை நமது பேரியக்கத்தின் 35வது இயக்க தினம். கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உரிமைகளுக்காக, உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஈட்டிமுனையாய் இருந்து போராடிக் கொண்டிருக்கிற மகத்தான இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற இந்த மாபெரும் இயக்கம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கான உரிமைப்போராட்டங்கள் வெடித்தன. உரிமைகள் கிடைத்தன.*
*⚡எதுவரினும் எத்தனை இடர்வரினும் கொண்ட கொள்கையில் நெஞ்சுறுதியோடு நிற்கிற இயக்கமாய்,*
*விளங்கிக் கொண்டிருப்பது நம் பேரியக்கம்.*
*⭐ஆசிரியர்கள் நலனுக்காக மட்டுமல்லாது மாணவர்கள் நலனுக்காக, கல்வி நலனுக்காக, பொதுமக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் நம் பேரியக்கத்தின் இயக்க நாளை 02.08.2018 அன்று இயக்கத்தின் ஆணிவேறாய் விளங்கும் அனைத்து வட்டார நகரக்கிளைகளும் கல்வி அலுவலங்கள் முன்பு இயக்கக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டு இயக்கப் பதாகையை உயர்த்திப்பிடிக்க மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*⭐தமிழகம்முழுவதும் ஆலமரம்போல் பரந்து விரிந்திருக்கும் நம் பேரியக்கத்தை மாநிலம் முழுவதும் தாங்கி நிற்கிற வீர விழுதுகளாய் விளங்கிக் கொண்டிருக்கும் மாநில, மாவட்ட, வட்டார நகரக்கிளைகளின் பொறுப்பாளர்களே! 05.08.2018 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மண்ணில் விரிவடைந்த மாநில சிறப்புப் பொதுக்குழுவில் சந்திப்போம். புதிய வரலாறு படைப்போம்.*
No comments:
Post a Comment