Monday, 10 September 2018

*செப்.26: பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாட்டு : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/09/26-tnptf.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு செப்டம்பர் 26 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.*


*⭐போராட்டப் பிரகடன மாநாட்டிற்கு*

*⚡தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும்,*

*⚡பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்,*

*⚡தோழமைச் சங்கப் பிரதிநிதிகளும்,*

*கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.*



*⭐அதற்கான பணிகளை மாநில மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.*


*⭐அதன்படி, பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடானது 26.09.2018 அன்று கீழ்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது.*

*_அண்ணா ஆடிட்டோரியம்,_*

*_சுவாமி சிவானந்தா சாலை,_*

*_சேப்பாக்கம்,_*

*_சென்னை-5_*



*⭐20,000-க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் இப்போராட்டப் பிரகடன மாநாட்டில் பங்கேற்கும் வகையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட - நகர - வட்டாரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் கண்துஞ்சாது களப்பணியாற்றிட வேண்டுமாறு மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*


⚡தோழமையுடன்,

*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: