*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற உள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_75.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 12 நாள் : 17.09.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்னும் மகத்தான நம் பேரியக்கத் தோழர்கள் மிகக் கடுமையான களப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரமிது. அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முன்னின்று நடத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கே பெருமை சேர்த்துள்ளோம்.*
*⭐அடுத்து நம் முன் நிற்கக்கூடிய மிகப்பெரிய களப்பணி என்பது 26.09.2018 அன்று சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாக நடத்தும் _‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாடு”_.*
*⭐கடந்த சில தினங்களாக பெண் ஆசிரியர்கள் மாநாடு, பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாவட்ட ஆயத்த மாநாடுகள், ஜேக்டோ - ஜியோவின் போராட்ட தயாரிப்புக்கள் என்று பந்தயக் குதிரையின் பாய்ச்சல் வேகத்தைத் தோற்கடிக்கும் வகையில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நம் பேரியக்கத் தோழர்கள்.*
*⭐எத்தனை களப்பணிகள் அணிவகுத்து நின்றாலும், அத்தனை பணிகளையும் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் ஆற்றல் நமது பேரிய்கத் தோழர்களுக்கேயுரிய தனிச்சிறப்பு.*
*⭐செப்டம்பர் 26-ல் சென்னையில் வங்கக் கடலோரம் நாம் நடத்தும் _‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட மாநாடு”_ வங்கக் கடலைத் தோற்கடிப்பதாக அமையும் என்பது உறுதி.*
*⭐அம்மாநாட்டில் தமிழ்நாட்டின்; பெரும்பாலான, பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கின்றார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயரைப் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் மிகக் கடுமையான பணிப்பளுக்கள் காரணமாக மாநாட்டு அழைப்பிதழ், வால்போஸ்டர், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்டக் கிளைகளுக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது அவற்றை மாவட்டக்கிளைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியிருக்கிறது. அவற்றைப் பெற்று உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆசிரியர்களிடம் சென்று சேர்த்திட மாவட்டப்பொறுப்பாளர்கள்; மிகுந்த பொறுப்புணர்வோடு இமைப்பொழுதும் சோராது செயல்பட மாநிலமையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*⭐மாநில மையத்திலிருந்து அழைப்பிதழ், வால்போஸ்டர், துண்டுப்பிரசும் ஆகியவை வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் செப்டம்பர் 26 மாநில மாநாட்டை சமூக வலைதளங்கள் வழியே கொண்டு சேர்த்த தோழர்களுக்கு மாநில மையம் நன்றியையும், பாராட்டுகளையும்தெரிவித்துக்கொள்கிறது மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதியப்பிரச்சனை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இம்மாநாட்டின் மூலமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் எதிரெலிக்கும் என்பது உறுதி. செப்டம்பர் 26 மாநில மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு மிகச்சிறப்பாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மாநில மையம் செய்துகொண்டிருக்கிறது.*
*⭐மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் 08.09.2018 கன்னியாகுமரி மாநிலச் செயற்குழு முடிவின்படி இதுவரையில் மாவட்ட, வட்டார, நகரச் செயற்குழு அல்லது பொதுக்குழுகளைக்; கூட்டவில்லை என்றால் உடனடியாகக் கூட்டி மிகப் பெரும்பாலான நம் இயக்க உறுப்பினர்களையும், சங்கம் பாராது பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் மாநாட்டில் பங்கேற்கச் செய்திட முனைப்புடன் களப்பணியாற்றிட மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*
*⭐எத்தகைய சிரமம் இருப்பினும் அத்தனை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக்கிட நம் பேரியக்கத் தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விடுமுறை தினங்களிலும் வீடு வீடாகச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து களப்பணியாற்றி மாநாட்டை வெற்றிகரமாக்கிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment