Friday 30 November 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆணை எரிப்புப் போராட்டமும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_30.html


*பொதுச்செயலாளரின் அறிக்கை நாள் : 30.11.2018*


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*



*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்பதற்கான அரசாணை எரிப்புப் போராட்டம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல களப் போராட்டங்களை தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் அப்போராட்டங்களையும், நம் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாத தமிழக அரசும், கல்வித்துறையும் 26.11.2018-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையாகும்.*


*⭐போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை பாய்ச்சல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எப்போதும் ஆமை வேகத்தில் செயல்படும் சில கல்வித்துறை அலுவலர்கள் கூட இப்பணியில் முயல் வேகத்தில் ஈடுபடுவதை  நாம் பார்க்க முடிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய முன் விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளும் பணியிலும் சில கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.*


*⭐அரசாணை எரிப்புப் போராட்டத்திற்குச் செல்லும்போதே _“சிறையிலடைக்கப்படுவோம்; தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவோம்”_ என்பதையெல்லாம் எதிர்பார்த்தே களத்திற்குச் சென்றவர்கள் நாம். தற்போது கல்வித்துறை எடுக்கும் நடவடிக்கை என்பது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்கான உரிமைப்போரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்லாயிரக்கணக்கான களப்போராளிகள் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) வைச் சந்தித்தார்கள்” என்ற வரலாற்றையும் பதிவு செய்யப்போகிறது.*


*_“போராட்டம் என்பது உரிமைகளைப் பெறுவதற்கானஆயுதம் மட்டுமல்ல; பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஆயுதமும் தான்”_ என்பதைத் தொடர்புடையவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.  எனவே, எதை எவ்வாறு  எப்போது எதிர்கொள்ள வேண்டுமோ அதை அவ்வாறு அப்போது எதிர்கொள்வோம்.*


*🤝தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: