*தமிழக அரசின் 17(B) (பழிவாங்கும்) நடவடிக்கைக்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கமல்ல, உரிய முறையில் எதிர்கொள்ளும் இயக்கம் மேலும் 04.12.2018 முதல் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் உறுதியுடன் பங்கேற்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/17b-04122018.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 24 நாள் : 01.12.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழக ஊடகங்களில் இன்று வரை பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இதிலிருந்தே போராட்டத்தின் வலிமையும், முக்கியத்துவமும் வெளிப்பட்டுள்ளது.*
*⭐ “ ஆணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 5000 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்?” என்ற செய்தி இன்றைய (01.12.2018) ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு செய்தியை ஊடகங்களுக்கு வழங்கியது யார்? என்று தெரியவில்லை. ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு வேலை நிறுத்தத்தை உறுதி செய்துள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக தமிழக அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசின் இத்தகு மிரட்டல் நடவடிக்கை என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறு.*
*⭐அரசாணை எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 26.11.2018 அன்று தற்செயல் விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுத்து போராட்டக்களத்திற்கு வந்தவர்கள் நம்முடைய கணக்கீட்டின்படி 14500 போராட்டம் நடந்த அன்று பல மாவட்டங்களில் கைது நடவடிக்கை எடுக்காத காவல்துறையும், கண்டு கொள்ளாத கல்வித்துறையும் தற்போது சுறுசுறுப்பாக இயங்குவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.*
*⭐கடந்த 9 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்திய நாம் அரசாணை எரிப்புப் போராட்டம் என்று அறிவித்து மாதக்கணக்கில் காத்திருந்தபோதும் அதைக் கண்டு கொள்ளாத தமிழக அரசு, எதிர்காலத்தில் தமிழகத்தில் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டமும் நடத்தக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தகு நிலையை எடுத்து வருகிறது.*
*⭐ ‘அரசாணை எரிப்பு’ என்பது ஒரு போராட்ட வடிவம். ஏற்கனவே, பலமுறை தமிழகத்தில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் அஞ்சுகிற இயக்கமல்ல. இது போன்ற பல்வேறு அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்த இயக்கம்.*
*⭐பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்காகவும், தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய ஆசிரியர்கள் மீது இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பது தமிழக அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத் தராது. எனவே, பழிவாங்கும் நடவடிக்கைகளை உறுதியுடன் உரிய முறையில் எதிர்கொள்வோம்.*
*⭐04.12.2018 முதல் நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் பங்கேற்போம்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment