*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _அவசர செய்தி_ அரசாணை எரிப்பு அச்சம் வேண்டாம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_1.html
*_அன்பார்ந்த இயக்க பொறுப்பாளர்களே!,_*
*⭐மற்றும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வீர மறவர்களே!,*
*⭐ _நவம்பர் - 26 அன்று தற்செயல் விடுப்பு எடுத்து ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர் பெருமக்களே!_*
*⭐உங்கள் அனைவருக்கும் _மாவட்ட மையத்தின் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்களும் வணக்கங்களும்*.
*⭐கடந்த இரு நாட்களாக ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைவிட _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அரசாணை எரிப்பு போராட்டத்தைப் பற்றியும்_ அதில் கலந்து கொண்டு அரசாணையை எரித்த _ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் இன்னும் வழங்கப்பட இருக்கின்ற 17 B குறித்த விவாதங்களுமே_ மேலொங்கி நிற்கின்றது.*
*⭐இன்று காலை நமது _பேரமைப்பின் பெருமைக்குரிய பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள்_ நெல்லை மாவட்ட பத்திரிக்கை செய்தியை பார்த்து நமது மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.*
*⭐ _நேற்றே பல மாவட்டங்களில் 17B கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்_ காவல்துறை கைது செய்த மாவட்டங்களில் அவர்களிடம் பெயர் பட்டியலை வாங்கியதாகவும்*
*⭐ _கைது நடவடிக்கை இல்லாத நெல்லை, குமரி,சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில்_ மட்டும் கலந்து கொண்டோர் பட்டியலை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் பெறுவதற்கான வேலை நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.*
*⭐மேலும் _தமிழகம் முழுவதும் காவல்துறை கணக்கின்படி 6000 க்கும் மேற்பட்டோர் இவ்வரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக உளவுத்துறை_ தகவல் தெரிவித்து உள்ளது.*
*⭐17 B நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க 12 நாட்கள் கால அவகாசம் உண்டு*.
*⭐மாநில மையம் மிகச்சிறந்த வழக்கறிஞர்களோடு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து மாநிலம் முழுமைக்குமான ஒரு பொதுவான விளக்கத்தை அளிக்கும்*.
*⭐அதுவரை எந்த உறுப்பினர்களும் தனியாக விளக்கம் அளிக்க வேண்டாம் எனவும் இன்னும் விளக்கம் கோராத மாவட்டங்களில் அதற்கான கடிதத்தை நாம் யாரும் அவர்கள் அழைத்தால் கூட நேரடியாக சென்று வாங்க வேண்டாம் எனவும் அவர்கள் பதிவு அஞ்சலிலோ அல்லது நேரில் வந்தோ நமக்கு வழங்கட்டும்*.
*⭐நமது கையில் தபால் கிடைத்த நாளிலிருந்து 12 தினங்களை தயாரிப்பு காலமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள்.*
*⭐மேலும் வரும் _டிசம்பர் - 4 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ போராட்ட களத்தில் எப்போதும் போல்_ நமக்கே உரிய போர்குணத்தோடு சிறப்பாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தகவல் தெரிவித்தார்கள்.*
*⭐எனவே வட்டார, நகரக்கிளை பொறுப்பாளர்களே!*
*⭐நீங்கள் உங்கள் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்களை _இன்னும் அதிக உற்சாகமாய் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுங்கள்._*
*⭐ _தமிழகத்தின் எந்த ஒரு மூளையிலும் எந்த ஒரு உறுப்பினருக்கும் பாதிப்பு என்றால் அதைப்பார்த்துக் கொண்டு TNPTF சும்மா இருக்காது_ என்பதற்கான கடந்த கால வரலாறுகளை புரிய வையுங்கள்.*
*_நெஞ்சினை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்_*.
*⭐நம்மால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்ததாக நாளைய வரலாறு பேசட்டும்.*
*🤝தோழமையுடன்.....*
*_செ.பால்ராஜ்,_*
*மாவட்ட செயலாளர்*
*நெல்லை - TNPTF*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment