Sunday, 20 January 2019

*22.01.19 முதல் ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 50000 க்கும் மேற்பட்ட நமது இயக்க தோழர்கள் முழுமையாக கலந்துகொள்ளவேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாற்றம் செய்வதை கண்டிப்பதுடன் சட்டரீதியான போராட்டத்தை அனுகவும் தயாராக உள்ளது என TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/220119-50000-lkg-ukg-tnptf.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்.*


*🌟வரலாற்று சிறப்புமிக்க கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஜாக்டோ ஜியோ சார்பாக 22.01.2019 முதல் நடைபெற உள்ளது.*



*🌟2003 -ஆம் ஆண்டுமுதல் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மக்களை பாதிக்காத பல்வேறு இயக்கங்களை ( முறையீடு, ஆர்ப்பாட்டம், பேரணி, பெருந்திரள் முறையீடு, பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், வேலைநிறுத்தம், நீதிமன்ற தலையீடு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் வழியே தரப்பட்ட முறையீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில்) நடத்தியும், அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதிகளை தானே நிறைவேற்றாத சூழலில்தான் வேறு வழியின்றி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றோம்.*


*⭐மக்கள் நலனிலும் ஊழியர் நலனிலும் அக்கறையற்ற அரசுகள் வேலை நிறுத்தத்தை தள்ளிப் போட நடத்தும் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றது இல்லை*


*⭐அரசு, வேலை நிறுத்தத்தை பிசுபிசுக்க வைக்கும் முயற்சியாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து மீண்டும் காலம் கடத்தவும்  வாய்ப்பு உள்ளது*


*⭐ஆனால் ஜேக்டோ-ஜியோ தலைவர்கள் அரசின் காலம் தாழ்த்தும் யுக்திகளை ஏற்கனவே கண்டவர்கள் என்பதால் இம்முறை கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில்  உறுதியுடன் உள்ளனர்*


*⭐இவ்வேலை நிறுத்தத்தை நாம் விரும்பி செய்யவில்லை. பல்லாண்டு போராடியும் அரசு பாரா விழியினராய்,, கேளா செவியினராய், நம் துயர் உணரா உள்ளத்தினராய் உள்ளதாலேயே நாம் போராடும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளோம்*


*⭐கடமை உணர்ந்து சிறப்பாக பணியாற்றும் நாம் நம் உரிமைகளுக்காக போராடுவதற்கு அஞ்ச வேண்டியதில்லை*


*⭐எனவே நம்முடைய  இக்கால மற்றும் எதிர்கால நலன்கருதி 22.01.2019 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் 50000 மேற்பட்ட நமது இயக்க தோழர்கள் தீரத்தோடே களந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைச் செய்யுமாறு மாநில மையத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.*


*⭐இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாறுதல் செய்வதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது,*


*⭐மேலும் LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டால் எந்த ஆசிரியரும் ஆணையினை பெற வேண்டாம் எனவும் தற்காலிகமாக பணி ஏற்க சொன்னாலும் ஏற்க வேண்டாம் எனவும் மாநில மையத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.*


*⭐LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை எதிர்த்து நமது இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை  வழக்கு தொடுத்து சட்டப்போராட்டம் காண உள்ளோம், இது குறித்து இன்று வழக்கறிஞருடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*


*_போராடிப் பெற்றவற்றைப் போராடி மீட்க வேண்டும்._*


*_போராடி மீட்டவற்றைப் போராடிக் காக்க வேண்டும்._*


*_போராடும் வழியை விட்டால் வேறென்ன வழி நமக்கு_*

*_விடியலைக் காண்பதற்கு..._*



*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: