*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட செய்தி துளிகள் மற்றும் தீர்மானங்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_72.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்டம் 12.01.2019 அன்று மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமையில் மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*
*⚡மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரவேற்புரையாற்றினார்.*
*⚡வேலை அறிக்கையை சமர்ப்பித்தும் சங்கத்தின் கடந்தகாலச் செயல்பாடுகள், எதிர்கால இயக்க நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கவுரையாற்றினார்.*
*⚡ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோவின் மாநில நிதிக்காப்பாளர் _தோழர்.ச.மோசஸ்_ உரையாற்றினார்.*
*⚡சங்கத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ உரையாற்றினார்.*
*_தீர்மானம்: 1_*
*⭐கூட்டத்தில் வரும் 22.01.2019 முதல் 7 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 50 ஆயிரம் ஆசிரியர்களையும் பங்கேற்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.*
*_தீர்மானம்: 2_*
*⭐தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.*
*_தீர்மானம்: 3_*
*⭐தமிழகத்தில் அரசுப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் துவக்கப்படவுள்ள LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்பது கல்வித்துறை விதிகளுக்கு புறம்பானது. LKG, UKG வகுப்புகளில் முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி ஆசிரியர்களாக நியமிப்பது என்பது தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக LKG,UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடவில்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என தீர்மாணிக்கப்பட்டது.*
*_தீர்மானம்: 4_*
*⭐தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் வகையிலான பள்ளிகள் இணைப்புத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், தொடக்கக்கல்வியின் தனித்தன்மையும், முக்கியத்துவமும் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
*⚡இறுதியில் துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றியுரை ஆற்றினார்.*
*⭐கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநிலப்பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment