*பள்ளிகளில் Attendance App - ன் மூலமாக ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்*
*🌟 Attendance App - ல் மாணவர்களின் வருகைப் பதிவு அனைத்து வகை அரசு / உதவிபெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.*
*🌟மாணவர்களின் வருகைப் பதிவுகளையும் அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளையும் தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும்.*
*🌟மேலும், ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை தலைமையாசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டிட வேண்டும். ஆசிரியர்களின் வருகைப் பதிவில் தவறுகள் இருப்பின் அப்பள்ளியின் தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*
*🌟Attendance App - ன் பதிவுகளை தினந்தோறும் Monitor செய்ய CEOs, DEOs, BEOs மற்றும் EMIS District Coordinators கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
*🌟ஆசிரியர்களின் வருகைப்பதிவு பதிவுசெய்யும் படி முறைகள் (Step by Step) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*
*🌟எனவே அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இப்படி முறையினைப் பின்பற்றி அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் ஆசிரியர்களின் வருகைப்பதிவினை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
No comments:
Post a Comment