*அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சட்டப் போராட்டம் மற்றும் களப்போராட்டம் குறித்து மாநில பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post.html
*மாநிலப் பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 17 நாள் : 02.06.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*
🛡⚔
*🌟அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் ,வேதனை கலந்த விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் நமது அமைப்பின் சார்பில் விவாதித்தபோது, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை மாநில அமைப்பு நுணுக்கமாக ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளது. சட்டப்போராட்டத்தில் அவசரப்பட்டு உடனடியாக ஒரு முடிவை எடுக்க இயலாது என்பதை மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறது.*
🛡⚔
*🌟அதே நேரத்தில் அங்கன்வாடிகளில் நியமிக்கப்படும் உபரி இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் தங்களது ஒன்றியத்தில் மூப்புநிலை தொடர்பாக விதிமீறல் நடைபெற்றுள்ளது என்று கருதினாலோ அல்லது அங்கன்வாடி ஆசிரியர் நியமனத்தில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று கருதினாலோ பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதையும் மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறது.*
🛡⚔
*🌟இத்தகைய தொடர் ஆசிரியர் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு சமரசமற்ற களப்போராட்டமே!*
*_“எந்த விமானமும் ஓடுபாதை முடிந்து விட்டதென்று நின்று விடுவதில்லை; அங்கிருந்துதான் அது பறக்கத் துவங்குகிறது!_*
*_எல்லாம் முடிந்து விட்டதென்று நினைக்கும் இடம்தான் ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம்!”_*
*போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம் 07.06.2019 ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் அணி திரள்வோம்!*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment