Wednesday, 3 July 2019

*அடிப்படை வசதிகள் இன்றியும், ஊழியர்கள் பற்றாக்குறையால் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணப்பலன்களைப் பெற முடியாமல் 290 ஆசிரியர்கள் தவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/290.html


*🌟திண்டுக்கல்: பணியாளர் பற்றாக்குறையுடன் குஜிலியம்பாறை வட்டாரக்கல்வி அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் ஊதியம், அகவிலைப்படி உயர்வு, உள்ளிட்ட பணப்பலன்களைப் பெற முடியாமல் 290 ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.*



*🌟திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளி ஆய்வு, மாணவர்களுக்கு தேவையான 12 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு சார்பில் கேட்கப்படும் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குதல், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல், ஊதியம் சார்ந்து நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் வட்டார கல்வி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*


*🌟ஆனால், குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தைப் பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குறைவான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் நிலை உள்ளது. குறிப்பாக 2 வட்டாரக் கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டிய நிலையில், ஒரு பணியிடம் தொடர்ந்து காலியாக இருக்கிறது. அலுவலகக் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட 12 பணியிடங்களில், 2 ஊழியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில், ஒரே வட்டாரக் கல்வி அலுவலரால் 98 பள்ளிகளை ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது.*


*🌟மேலும் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவது முதல் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பணப் பலன்களை குறிப்பிட்ட காலதில் வழங்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.*


*_இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் குஜிலியம்பாறை வட்டார செயலாளர் _அருள்செழியன்_ கூறியது:*



*🌟தமிழக அரசு உத்தரவிட்டு 40 நாள்களாகியும் கூட, கடந்த 5 மாதங்களுக்கான அகவிலைப்படி குஜிலியம்பாறை வட்டார ஆசிரியர்கள் பெற முடியாதநிலை உள்ளது. ஜூன் மாதத்திற்கான ஊதியம், மாதத்தின் கடைசி வேலை நாளான ஜூன் 28 ம் தேதியாகியும் பெற முடியவில்லை. வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை கணினி மயமாக்கும் பணி தாமதமாகியுள்ளது. இதனால், ஊதிய பட்டியலை பெற முடியாது என வேடசந்தூர் சார் நிலை கருவூல அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.*



*🌟இடவசதியின்றி நெருக்கடியான சூழலில், அடிப்படை வசதியில்லாமல் குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகம் உள்ளது. கல்வித்துறை நிர்வாகம் பணியிடங்களை முறையாக நிரப்பபாத காரணத்தால், ஆசிரியர்கள் மட்டுமின்றி, பள்ளிகள் செயல்பாடுகளும் முறையான ஆய்வு நடத்தப்படாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன.*



*🌟இந்த பிரச்சனைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றார்.*



*_மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:_*



*🌟குஜிலியம்பாறை வட்டார தொலைதூரத்தில் (திண்டுக்கலிலிருந்து 48 கிலோமீட்டர்) அமைந்திருப்பதால் அங்கு பணிபுரியும் அலுவலர்களும், ஊழியர்களும் தண்டனையாக நினைக்கின்றனர்.*




*🌟குறிப்பாக, ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியும் அதிகமாக இருப்பதால், அலுவலர் நிலை பணியாளர்கள் இந்த வட்டாரத்துக்கு வருவதை தவிர்க்கும் நிலை உள்ளது. 2019 ஜூலை 29 ஆம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகள் நிறைவு செய்த அலுவலர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடம் மாறுதல் செய்யப்பட உள்ளனர். அப்போது குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: