*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) சார்பாக நடைபெற உள்ள 29.08.2019 வட்டாரத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தை பேரெழுச்சியோடு நடத்துவோம் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/tnptf-29082019.html
*⚔*
*🛡29.08.2019 வட்டாரத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தை பேரெழுச்சியோடு நடத்துவோம்!*
*_திக்கெட்டும் ஒலிக்கட்டும் தீக்குரல்கள்!_*
*📢🖋பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 23 நாள் : 28.08.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*
*⚔*
*🛡தொடக்கக்கல்வியின் மீதான தொடர் தாக்குதல்கள் அணிவகுத்து வந்துகொண்டேயிருக்கிறது. எதிர்காலத்தில் தொடக்கக்கல்வித்துறை என்ற நிர்வாக அமைப்பு என்ன ஆகும் என்ற கேள்விக்குறி தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.*
*⚔*
*🛡பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றும் முயற்சி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படும் நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களது நம்பிக்கையை இழந்து மேலும் மாணவர்களது எண்ணிக்கை குறைந்து அப்பள்ளிகள் மூடப்படும் அவலநிலைதான் உருவாகும். அவ்வாறு மூடப்படும் பள்ளிகளுக்கு ‘நூல் நிலையம்’ என்று புதிய பெயர் சூட்டப்படும். ஏற்கனவே 46 பள்ளிகள் ‘நூல் நிலையம்’ என்ற பெயரில் மூடப்பட்டுள்ள நிலையில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட சுமார் 1850 பள்ளிகளுக்கும் ‘நூல் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் நிலை உருவாகும்.*
*⚔*
*🛡கேரள மாநிலத்தில் தொடக்கக்கல்வியில் மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, அங்கு அரசுப்பள்ளிகள் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.*
*⚔*
*🛡மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 5 வகுப்புகள், 23 பாடங்கள் உள்ளன என்பதைப் பற்றிய புரிதல் இங்கு யாருக்கும் இல்லை. கல்வி உரிமைச்சட்டம் - 2009-ன் படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்ற நடைமுறைக்கும் தற்போது குந்தகம் ஏற்பட்டுள்ளது. 61 மாணவர்கள் என்றால் 3 ஆசிரியர்கள் என்ற நிலை மாற்றப்பட்டு 76 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் என்ற நிலை உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.*
*⚔*
*🛡தொடக்கக்கல்வித்துறை என்ற அழகிய பூமாலை ஒவ்வொரு இதழாக நம் கண்முன்னே பிய்த்து எறியப்படுகிறது. இறுதில் நார் மட்டுமே மிஞ்சும்போல் தெரிகிறது.*
*_“பள்ளிக்கதவை திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான்”_*
*என்ற பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகள் இங்கு யாருக்கும் நினைவில் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அரசு ஆரம்பப்பள்ளிகளே இல்லை என்ற நிலைஉருவாகலாம்.*
*⚔*
*🛡இத்தகு இக்கட்டான சூழலில் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கல்வி நலன், ஆசிரியர் நலன், மாணவர் நலன், தேச நலன் காக்க கணக்கற்ற களப்போராட்டங்களை சமரசமின்றி நடத்தியுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்விக்கு ஏற்பட்டுள்ள இழிநிலை போக்க 5 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(29.08.2019) வட்டாரத்தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.*
*⚔*
*🛡எத்தனை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், தடைகள் வந்தாலும், சிரமங்கள் இருந்தாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட வலிமையை உணர்த்தும் வகையில் நாளைய போராட்டக்களத்தை அமைத்திட மலை குறைந்தாலும் நிலை குலையாத வட்டார, நகர கிளைகளின் ஓய்வறியா தோழர்களை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡நாளைய ஆர்ப்பாட்டம்,நடந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகளுக்கு ஆசிரியர்களின் எதிர்ப்பை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையிலும், தனிச்சங்க நடவடிக்கையாக நம் பேரியக்கத்தின் வலிமையைப் பறைசாற்றக்கூடிய வகையிலும் அமைந்திட வேண்டும்.*
*⚔*
*🛡நாம் போராட்டத்தை அறிவித்த மறுநாள் ஜாக்டோ ஜியோ தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முன்னணிப்படையாகத் திகழ்வோம். நாளைய நம் தனிச்சங்கப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ போராட்ட நிகழ்வுகளுக்கு ஒரு உந்துசக்தியாய் நிகழ்த்துவோம். அநீதிக்கு எதிரான போர்க்குரல்கள் எத்திசை நோக்கினும் ஒலிக்கட்டும்.*
💥💥💥💥💥💥💥💥
*விண்ணதிரட்டும்! மண்ணதிரட்டும்!*
💥💥💥💥💥💥💥💥
*_“ நீ மண்ணுக்காகப் போராடத் தயங்குகிறாய்... ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது…!_*
- *சேகுவேரா*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment