🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/5-8_15.html
*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தி அறிக்கை_* *எண் : 15/2019 நாள்: 15.09.2019*
*⚔*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 15.09.2019 அன்று சென்னையில் சங்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் _தோழர்.மூ. மணிமேகலை,_ தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா. கணேசன்,_ வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் _தோழர்.ச. மயில்,_ மாநில பொருளாளர் _தோழர்.க. ஜோதிபாபு_ உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டது.*
*⚔*
*🛡தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு/அரசு உதவி பெறும் துவக்கப்/நடுநிலைப்பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அரசாணை எண் 164 நாள்: 13.09.2019 ன் படி ஆணையிடப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡சுமையின்றி கற்கவும், இடைநிற்றல் இன்றி கற்கவும், குழந்தைகளின் மகிழ்வான பள்ளி பருவத்தை பொதுத்தேர்வு என்ற வரையறைக்குள் கொண்டுவந்து பள்ளிக்கல்வி மீதான பயத்தை 10 மற்றும் 13 வயதிலேயே கொண்டு வரும் இம்முடிவை முற்றாக கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை கோருகிறது.*
*⚔*
*🛡கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பள்ளிக் கல்விக்கு வரும் குழந்தைகள் மீதான உளவியல் சிந்தனை அணுகு முறையான எட்டாம் வகுப்பு வரை தேக்கமின்றி தேர்ச்சி என்ற முடிவை முற்றாக மறுதலித்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியிலிருந்து ஒரு பகுதியினரை வெளியேற்றும் முறையாகத்தான் இருக்கும்.*
*⚔*
*🛡தேசியக்கல்விக் கொள்கை - 2019 ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள 3, 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற முடிவை, மத்திய அரசு எந்த முடிவையும் அறிவிப்பதற்கு முன்பே இராஜாவை விஞ்சும் இராஜவிசுவாசிகள் போல் 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறை தமிழ்நாட்டின் கல்வித்துறையில் இடைநிற்றலை அதிகப்படுத்துவதற்கும், மாணவர்கள் தங்களது குடும்பத்தினரின் பூர்வீகத் தொழில்களில் ஈடுபடும் அபாயங்களும் ஏற்படும்.*
*⚔*
*🛡மாணவர்களை பள்ளிக்கல்வி முழுவதும் தேர்வு பயத்தில் வைத்திருக்கும் 5 மற்றும் 8 வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்ற முடிவை முற்றாக கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி வலியுறுத்துகிறது. தமிழகப் பள்ளிக்கல்வியைச் சீரழிக்கும் இம்முடிவை உடனடியாகத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என இம்மாநிலச் செயற்க்குழு கேட்டுக்கொள்கிறது.*
இப்படிக்கு,
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment